சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவுவது சம்பந்தமான நடைமுறைகளை காவல்துறை எளிதாக்கியுள்ளது. சிலை அமைப்பவர்கள் ஸ்டேஷனில் யாரை அணுகுவது உள்ளிட்ட விவரங்களை சென்னை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்த காவல்துறை அறிவிப்பு:
“செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறையின் சார்பில் விநாயகர் சிலையை நிறுவுவதற்கு கீழ்க்கண்ட நடைமுறை இந்த (2019) ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுநாள்வரையில் விநாயகர் சிலைகளை நிறுவும் நபர்கள் - நிறுவும் அமைப்புகள் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி - நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ற துறைகளிடமிருந்து அவர்கள் நேரடியாகச் சென்று முறையாக ஒவ்வொருவரிடமும் அனுமதி பெறப்பட்ட பின்னரே சிலைகளை வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த சிலைகளை நிறுவுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கும் இன்னலுக்கும் ஆளாகினர்.
இந்தப் பிரச்சினையைக் களையும் வகையில் ஒற்றைச் சாளர முறை என்ற புதிய முறை சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விநாயகர் சிலைகளை நிறுவுபவர்களோ - நிறுவும் அமைப்புகளோ ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சிலைகளை நிறுவுபவர்கள் - நிறுவும் அமைப்புகள் அந்தந்த காவல் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளைச் சந்தித்து மனுக்களைக் கொடுத்தால் போதுமானது.
அந்த அதிகாரி அந்த மனுக்களைப் பெற்று. மற்ற துறைகளிடம் இருந்து பெறவேண்டிய அனுமதியை அந்தந்தத் துறைகளிடம் இருந்து அவரே பெற்று இறுதியில் விநாயகர் சிலைகளை நிறுவுபவர்களுக்கு- நிறுவும் அமைப்புகளுக்கு முறையான அனுமதியை வழங்குவார்.
இதனால் விநாயகர் சிலைகளை நிறுவுபவர்களுக்கோ- நிறுவும் அமைப்புகளுக்கோ எந்தவித சிரமமோ, தாமதமோ ஏற்படாது. ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, விநாயகர் சிலைகளை நிறுவ இருக்கும் அமைப்புகள் - தனிப்பட்ட நபர்கள் - கட்சிகள் இம்முறையைப் பின்பற்றி வரும் 22-08-2019 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி - 2019 ஒற்றைச் சாளர முறை பொறுப்பு அதிகாரிகள் விவரம்
1. பூக்கடை - ராஜ்குமார். யானைக்கவுனி காவல் நிலையம் - 9498163740
2. வண்ணாரப்பேட்டை - மோகன் - கொருக்குப்பேட்டை காவல் நிலையம் 9444304325
3. மாதவரம் - மு.ராமலிங்கம் - உதவி ஆணையாளர் - மாதவரம் சரகம் 9600044686
மாதவரம் - முருகன் - மாதவரம் காவல் நிலையம் (குற்றப்பிரிவு) 9498140653
புழல் - வசந்தன் - செங்குன்றம் காவல் நிலையம் (குற்றப்பிரிவு)- 9498143870
எண்ணூர் - கமலக்கண்ணன் - மணலி காவல் நிலையம் (குற்றப்பிரிவு) - 9443271922
4. அண்ணாநகர் - ஏ.ஜெயராமன் - உதவி ஆணையாளர் - கோயம்பேடு சரகம் - 9444803562
அண்ணாநகர் - ராஜேஷ் கண்ணா - அண்ணாநகர் காவல் நிலையம்- 9498128999
திருமங்கலம் - ரவி. திருமங்கலம் காவல் நிலையம் - 9498145522
கோயம்பேடு - ராதாகிருஷ்ணன் - மதுரவாயல் காவல் நிலையம் - 9789822026
வில்லிவாக்கம் - ரஜேஷ்பாபு வில்லிவாக்கம் மதுரவாயல் காவல் நிலையம் - 9962100057
5 . அம்பத்தூர் B.சம்பத் - உதவி ஆணையாளர் - எஸ்ஆர்எம்சி சரகம் - 9840712129
அம்பத்தூர் - பொய்யாதுரை - அம்பத்தூர் மதுரவாயல் காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) 9444139813
எஸ்ஆர்எம்சி - சிட்டிபாபு - மாங்காடு காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 9498103619
பூந்தமல்லி - முருகேசன் - திருவேற்காடு காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 9840887388
ஆவடி - காளிராஜ் - ஆவடி - காவல் நிலையம் - 9444174153
பட்டாபிராம் - ஜெயசங்கர் - முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் - 9840123420
6. புளியந்தோப்பு ஜெகன்நாதன் - செம்பியம் காவல் நிலையம் - 9498144358
மைலாப்பூர் காவல் மாவட்டம்:
1.மெரினா - அனந்தன் - மெரினா காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 8807349445
2. கீழ்ப்பாக்கம் - சாந்தி தேவி டி.பி, சத்திரம் - 9498142516
3. திருவல்லிக்கேணி - பிரசித்தா தேவி - அண்ணா சதுக்கம் காவல் நிலையம் - (குற்றப்பிரிவு
9498128924
4. தி, நகர் - பாலமுரளி - மாம்பலம் காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) 9498128088
9840323723
5. அடையாறு - அனந்தராமன் - உதவி ஆணையாளர் சைதாப்பேட்டை சரகம்- 9840094630
அடையாறு - மனோகரன் - அடையார் காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 9498103962
கிண்டி - ராஜிவ் பிரின்ஸ் ஆருன் - வேளச்சேரி -காவல் நிலையம் -9498131007
சைதாப்பேட்டை - புகழேந்தி - சைதாப்பேட்டை காவல் நிலையம் - 9498103139
தரமணி - புஷ்பராஜ் - தரமணி - காவல் நிலையம் - 9498143503
துரைப்பாக்கம் - சரவணன் - துரைப்பாக்கம் - காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 9498165777
நீலாங்கரை - ஜேக்கிம் ஜெர்ரி - நீலாங்கரை காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 9498132981
6. புனித தோமையார் மலை - நடேசன் - உதவி ஆணையாளர் மீனம்பாக்கம் -9498142873
புனித தோமையார் மலை- சிவகுமார் - பழவந்தாங்கல் -காவல் நிலையம் - (குற்றப்பிரிவு) - 9840923652
மீனம்பாக்கம் - சிபு குமார் - மீனம்பாக்கம் - காவல் நிலையம் - 9498126708
பல்லாவரம் - பசுபதி - சங்கர் நகர் காவல் நிலையம் - (குற்றப்பிரிவு)-9498129399
மடிப்பாக்கம் - அழகு - பள்ளிக்கரணை - காவல் நிலையம் - 9840918900
தாம்பரம் - ஆல்பின்ராஜ் - தாம்பரம் காவல் நிலையம் - 9498127584”
இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago