போக்குவரத்து விதிமீறல்களில் அபராதத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம், 3 மாதம் லைசென்ஸ் தகுதியிழப்பு, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் என அபராத தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய போக்குவரத்து வாகனச் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராததொகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபராதத்தொகை அமலுக்கு வந்ததாக போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதிகரித்து வரும் வாகன விபத்துக்களால் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என பலதரப்பட்ட மக்கள் விபத்துக்கு உள்ளாகி உயிரிழக்கின்றார்கள்.
பெரும்பாலான வாகன விபத்துக்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது , மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறைவாக உள்ளதால் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
எனவே சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் சாலை விபத்துகளை கடைபிடிக்க செய்யவும், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா-2019 அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அதிக அளவில் நடைபெறும் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராத தொகை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டப்பிரிவு போக்குவரத்து விதிமீறல் தற்போது விதிக்கப்படும் அபராத தொகை விபரம்: முந்தைய கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்ட கட்டணமும்.
புதிய அபராத தொகை 177 போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம்
ரூபாய். 100 ரூபாய். 500
177A சாலை ஓழுங்குமுறை விதிகளை மீறுதல் ரூபாய். 100 ரூபாய். 500
178 பயனச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது. ரூபாய். 200 ரூபாய். 500
179 போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவது. ரூபாய். 500 ரூபாய். 2000
180 அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 5000
181 உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 500 ரூபாய். 5000
182 தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 500 ரூபாய். 10,000
182 B நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடபெரிய வாகனம் புதியது ரூபாய். 5000
183 அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 400
ரூபாய். 1000 for LMV ரூபாய். 2000 for நடுத்தர பயணிகள் வாகனம்.
184 ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 5000 வரை
185 மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 2000 ரூபாய். 10,000
189 சாலைகளில் வேகமாக / பந்தயத்தில் ஈடுபடுவது ரூபாய். 500 ரூபாய். 5,000
192 A அனுமதி (பர்மிட்) இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 5000 வரை. ரூபாய். 10,000 வரை
193 முகவர்கள் (உரிமம் தொடர்பான விதிமீறல்கள்) New ரூபாய். 25,000 to ரூபாய். 1,00,000
194 வாகனங்களில் அதிக அளவில் சுமை ஏற்றுதல் ரூபாய். 2000 மற்றும் ரூபாய். 1000 ஒவ்வொரு
கூடுதல் டன் எடைக்கும். ரூபாய். 20,000 மற்றும் ரூபாய். 2000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும்.
194 A அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் ரூபாய். 1000 ஒவ்வொரு கூடுதல் பயணிகளுக்கும்.
194 B சீட் பெல்ட் ரூபாய். 100 ரூபாய். 1000
194 C இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் பயணிகள் ரூபாய். 100 ரூபாய். 2000, ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
194 D தலைக்கவசம் ரூபாய். 100 ரூபாய். 1000. ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
194 E ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருத்தல் ரூபாய். 10,000
196 காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 2000
199 சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்கள் காப்பாளர் / வாகன உரிமையாளர் குற்றவாளியாக கருதப்படுவார். ரூபாய். 25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை. சிறார்கள் Juvenile Justice Act படி நடவடிக்கை. வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.
206 ஆவணங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம். ஓட்டுநர் உரிமம் ரத்து
u/s 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194E, 210 B போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் போக்குவரத்து விதிமீறல்கள் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகையின் இருமடங்கு அபராதம் மேற்கண்ட புதிய அபராத தொகை சென்னை பெருநகரில் அமல்படுத்தப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளையும் சட்டத்தையும் மதித்து அவற்றைக் கடைப்பிடித்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”
இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago