மது போதையில் தகராறு: ஒருவர் கொலை- நண்பர்கள் 6 பேர் தலைமறைவு

By செய்திப்பிரிவு

சென்னை

மது போதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் அருகே நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவரது நண்பர்கள் விக்னேஷ், சுரேஷ், கார்த்தி, தினேஷ், அரிஹரசுதன், இஸ்ரேல். இவர்கள் அனைவரும் நெற்குன்றம் ஏவிகே நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு அட்டை நிறுவனத்தின் பின்புறம் அமர்ந்து தினமும் மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது ரஞ்சித்துக்கும் மற்ற நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் உட்பட 6 பேரும் சேர்ந்து ரஞ்சித்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க மடைந்த ரஞ்சித் கீழே விழுந்து விட்டார். இதைக் கண்டு அனை வரும் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. ரஞ்சித் அதே இடத்தில் இறந்து விட்டார். காலை யில் அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீஸார், ரஞ்சித் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித் கடந்த 2018-ம் ஆண்டு காவலர் அன்பழகன் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டியவர். இவர் மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

மேலும்