சந்தவாசல் அருகே பண தகராறில் பெண் படுகொலை: கட்டுமான தொழிலாளி கைது

By செய்திப்பிரிவு

சந்தவாசல் அருகே பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்த கட்டுமான தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் துரிஞ்சிக்குப்பம் அடுத்த வெலுக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞான சேகர் மனைவி விஜயா(40). கட்டுமான தொழிலாளி. இவர், கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இந்நிலையில் கேளூர் அடுத்த கொல்லமேடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தலை நசுங்கி உயிரிழந்து கிடப்பது நேற்று காலை தெரியவந்தது. இதையறிந்த விஜயா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது விஜயா என்பது உறுதியானது.

இதுகுறித்து தகவலறிந்த சந்தவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிக் கப்பட்டது. காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாய் பெஸி, உடலை சுற்றி வந்து சுமார் 1 கி.மீ., தொலைவு ஓடிச் சென்று நின்றது. இதையடுத்து, உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சந்தவாசல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விஜயா பயன்படுத்திய செல் போன் எண் மூலம் விசாரணை நடத்தப்பட்டதில் துப்பு துலங்கியது. அதன்பேரில், ஆத்து வாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டு மான தொழிலாளி சுப்ரமணியை (30) கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “பணி முடிந்து வீடு திரும்பிய விஜயாவை இரு சக்கர வாகனத்தில் சுப்ரமணி அழைத்து வந்துள்ளார். சம்பவ இடத்தில் வந்தபோது, விஜயாவிடம் தான் கொடுத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை சுப்ரமணி கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சுப்ரமணி, விஜயா தலை மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்