திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட திமுக பெண் பிரமுகர் சீனியம்மா ளின் மகன் கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை், கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ம் தேதி படுகொலை செய்யப் பட்டனர். தமிழகம் முழுவதும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
அரசியல் மோதலின் பின்னணியில் இந்த கொலைகள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த 25-ம் தேதி மதுரையில் தனது மகள் வீட்டில் தங்கியிருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம் மாளிடம் தனிப்படை போலீஸார் விசா ரணை நடத்தினர். இதில் தனக்கு தொடர்பு இல்லை என அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உமாமகேஸ்வரியின் வீட்டின் அருகில் உள்ள ஓட்டல் மற்றும் கட்டிடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், உமாமகேஸ்வரியின் வீடு அருகில் சம்பவத்தன்று, கார் ஒன்று 2 முறை சென்றது தெரிந்தது. மேலும் ஒரு நபர், கையில் மஞ்சள் பையுடன் அவ்வழியே நடந்து செல்லும் காட்சிகளும் கிடைத்தன. அந்த கார் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுடையது என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, மதுரையில் இருந்த கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் அழைத்து வந்து, பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசா ரணை நடத்தினர். கொலை நடைபெற்ற வீட்டுச் சுவரில் பதிவாகியிருந்த ரேகை களும் கார்த்திகேயனின் கைரேகைகளும் ஒத்துப்போனதால், அவர்தான் முக்கிய குற்றவாளி என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர். கார்த்திகேயன் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசியல் மோதல்
அரசியல் மோதலின் பின்னணியில் இந்த கொலைகள் நடைபெற்றது தெரிய வந்தது. உமாமகேஸ்வரியால், தனது தாயார் சீனியம்மாள் அரசியலில் முன் னுக்கு வர முடியவில்லை என்ற ஆத்திரத் தில் கொலை செய்ததாக, தனது வாக்கு மூலத்தில் கார்த்திகேயன் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
தீயிட்டு எரிப்பு
கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தக்கறை படிந்த ஆடைகள், கொள்ளை யடிக்கப்பட்ட நகைகள் ஆகியவற்றை, தாமிரபரணி ஆற்றில் வீசிவிட்டதாக கார்த்தி கேயன் முதலில் தெரிவித்திருந்தார். இத னால், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் போலீ ஸார் அவற்றை தேடினர். ஆனால், எதுவும் சிக்கவில்லை. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள சீனியம்மாளின் வீட்டில் நகைகள் மற்றும் கத்தி ஆகிய வற்றை மறைத்துவைத்திருந்தது தெரிய வந்தது. அங்கு தனிப்படை போலீஸார் சோதனை நடத்தி 25 பவுன் நகைகளை யும் கத்தியையும் கைப்பற்றினர். சம்பவத் தன்று கார்த்திகேயன் அணிந்திருந்த சட்டை, தொப்பி, செருப்பு, ரத்தக்கறை படிந்த வேட்டி ஆகியவற்றை கக்கன் நகர் பகுதியில் தீயிட்டு எரித்ததும் விசா ரணையில் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் தடயங்களை சேகரித்தனர்.
நடித்துக் காட்டினார்
உமாமகேஸ்வரியின் வீட்டுக்கு கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் நேற்று மாலை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து கார்த்திகேயன் நடித்துக் காட்டினார். அதை போலீஸார் வீடியோ பதிவு செய்து கொண்டனர். கார்த்திகேயனுக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் வழக்கில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு நீதிபதி வீட்டில் கார்த்திகேயன் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிசிஐடி விசாரணை
இவ்வழக்கில், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிறைச் சந்திரன், உலகராணி ஆகியோர் தனிப் படை போலீஸாருடன் இணைந்து ஏற் கெனவே விசாரணையில் ஈடுபட்டிருந் தனர். சிபிசிஐடி வசம் நிலுவையில் உள்ள வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன், இவ்வழக்கில் சேகரிக் கப்பட்ட ஆதாரங்களை ஒப்பிட்டு ஆய்வு நடைபெற்றது. இந்நிலையில், உமா மகேஸ்வரி கொலையில் அரசியல் பின்னணி இருப்பதால், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக் கப்பட்டது. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார், உமாமகேஸ்வரியின் வீட் டில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தனிப்படை போலீஸார் தங்கள் வசமுள்ள ஆதாரங்களை ஒப்படைத்ததும், கார்த்தி கேயனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago