இலங்கைக்கு கடத்தப்பட்ட 2,379 கிலோ பீடி இலைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து, தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்தனர்.
சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை புத்தளம் தளவிலா தேவாலயத்துக்கு வடகிழக்கே 22 கடல் மைல் தொலைவில் நின்றிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகை பிடித்து சோதனை செய்தனர். அந்த படகில் 74 சாக்கு மூட்டைகளில் 2,379 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. படகு, பீடி இலை மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறி முதல் செய்தனர். படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, புத்த ளம் காவல் துறையிடம் ஒப்படைக் கப்பட்டனர்.
விசாரணையில், படகில் இருந் தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பாறு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் (35), தொம்மை(50), பிராங்க்ளின் (27), எட்வர்டு (45), ஆரோக்கிய பென்சன் (35), ரமேஷ் (32) எனத் தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் கல்பிட்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பீடி இலைகள் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago