கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 40 ஏக்கர் குளம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து பொதுநல வழக்கு தொடர்ந் ததால் தந்தை, மகன் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட் டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்கிற ராமர்(70), கோயில் பூசாரி. இவரது மனைவி தாமரை (65). இவர்களின் மகள்கள் அன்ன லட்சுமி(38), சரஸ்வதி(35). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை. மகன் நல்லதம்பி(44), மருமகள் தமிழரசி(32). இவர்களுக்கு பொன்னர் (11) என்ற மகன், இனியா (6) என்ற மகள் உள்ளனர்.
திருச்சி இனாம்குளத்தூரில் வசித்துவந்த வீரமலை, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரான முதலைப்பட்டிக்கு குடி பெயர்ந்துள்ளார். அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் மல்லிகை, ரோஜா செடிகளை பயிரிட்டு பூ விற்பனை செய்து வந்தனர்.
முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான 198 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் முன்னர் இருந்தது. இதில், இப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாகக் கூறி 158 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குளத்துக்கென மீதம் இருந்த 40 ஏக்கர் நிலத்தை யும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதுகுறித்து வீர மலை, நல்லதம்பி மற்றும் அப்பகுதி யைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரிடமும் கடந்த பல ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்நிலையில், திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் உதவியுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், குளத்தின் ஆக்கிரமிப்பு களை அகற்றக் கோரி நல்லதம்பி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நல்லதம்பி மற்றும் அவரது தந்தை வீரமலை மீது அதிருப்தியில் இருந்தனர்.
இவ்வழக்கில், ஆக்கிரமிப்பு களை அகற்றுமாறு மாவட்ட ஆட்சிய ருக்கு 2018-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் பின்னரும், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் தோகமலை வட்டார வளர்ச்சி அலு வலர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினர் முதலைப் பட்டியில் குளம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடந்த 25-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய் வாளர், நில அளவையர் ஆகியோர் வந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர்.
இடத்தை அடையாளம் காட்டினர்
அப்போது வீரமலையும், நல்ல தம்பியும் ஆக்கிரமிப்பு இடத்தின் எல்லைப் பகுதிகளை அதிகாரிகளி டம் அடையாளம் காட்டியுள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீர மலை மற்றும் நல்லதம்பி மீது ஆத்திரத்துடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நல்லதம்பி நேற்று அவரது தோட்டத்தில் பறித்த பூக் களை திருச்சிக்கு எடுத்துச் சென்று மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். முதலைப்பட்டி அருகே வந்தபோது, அங்கிருந்த ரேடியோ ரூமில் பதுங்கியிருந்த 6 பேர் அவரைச் சுற்றிவளைத்து அரிவாளால் காலில் வெட்டியுள்ள னர். மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த நல்ல தம்பியின் கழுத்தில் அவர்கள் வெட்டியதில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார்.
இதையடுத்து, 6 பேரும் 2 மோட் டார் சைக்கிள்களில் ஏறி வீரமலை யைத் தேடி சென்றுள்ளனர். பேரன் பொன்னரை பள்ளிக்கூடத்துக்கு வேனில் ஏற்றி விடுவதற்காக வீட்டில் இருந்து அழைத்து வந்துகொண்டு இருந்த வீரமலையை 6 பேரும் சுற்றி வளைத்து அரிவாளால் வெட் டினர். இதைப் பார்த்த பொன்னர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள முள் காட்டுக்குள் ஒளிந்துகொண் டார். அப்போது, அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பொன்னரை தேடுவதை விட்டுவிட்டு அக்கும்பல் மோட்டர் சைக்கிள்களில் தப்பியது.
எஸ்.பி. ஆர்.பாண்டியராஜன், குளித்தலை காவல் துணை கண் காணிப்பாளர் சுகுமாரன் உள்ளிட் டோர் நேரில் சென்று சம்பவ இடத் தைப் பார்வையிட்டனர். மோப்ப நாய் ஸ்னூப்பி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களைச் சேகரித் தனர். அப்பகுதியில் நிலவிய பதற் றம் காரணமாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டனர்.
சிறுவன் பொன்னரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன், அமைச்சர் என்கிற பெருமாள், சசிதரன் உள்ளிட்ட 6 பேர் மீது குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியர் விளக்கம்
குளம் ஆக்கிரமிப்பு குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கூறியபோது, "ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற னர். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய படி, நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட நிலையிலும் அவசரப்பட்டு நினைவூட்டல் கடிதம் அனுப்பினர்" என்றார்.
ஆட்சியரிடம் ஏற்கெனவே புகார்
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி வீரமலையை மிரட்டியுள்ளார். பின்னர், அவரிடமிருந்து ஒரு ஆவணத்தில் கையெழுத்து பெற்று மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக குளித்தலை காவல் நிலையம், ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் வீரமலை புகார் தெரிவித்தும், இதுதொடர்பாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சிறுவன் உயிருக்கு ஆபத்து
வீரமலையின் குடும்பத்தில் 4 பெண்கள், 2 குழந்தைகள் மட்டுமே இருப்பதாலும், இவர்களில், குற்றவாளிகளை சிறுவன் பொன்னர் பார்த்துள்ளதாலும் சிறுவனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், பொன்னர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago