ராமேசுவரம் மீனவர்கள் படகு நடுக்கடலில் பழுதடைந்தது: எல்லை தாண்டியதாக 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராமேசுவரம் 

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ராமேசுவரம் படகு ஒன்று பழுதடைந்தது. இந்நிலையில் அவ்வழியே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடித்த தாகக் கூறி அந்த படகில் இருந்த 7 மீனவர்களைக் கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரது விசைப் படகில் இருந்த மீனவர்கள் கச்சத் தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடிக் கும்போது இயந்திரம் பழுதானது. இதையடுத்து இப்படகு காற்றின் வேகத்தில் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் பகுதிக்குள் நேற்று அதிகாலை சென்றது.

அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த ஜோசப் பால்ராஜ்(37), பெனிட்டோ(40), இன்னாசி(22), நாகராஜ்(45), சுப்பிரமணி(35), முனியசாமி(48), சத்தியசீலன்(25) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து எல்லையைக் கடந்து வந்து மீன்பிடித்ததாக படகை பறிமுதல் செய்து 7 மீனவர்களையும் கைது செய்தனர். மீனவர்களை மன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

மேலும்