திருநெல்வேலி
திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலையில், சந்தேகத்தின்பேரில் 70-க்கும் மேற்பட்டோரிடம் போலீ ஸார் நேற்று விசாரணை நடத்தினர். எனினும், துப்பு ஏதும் கிடைக்க வில்லை.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி (65). நெல்லை மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் இருந்தவர். இவரது கணவர் முருக சங்கரன் (74), நெடுஞ்சாலைத் துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே ரோஸ் நகரில் வசித்து வந்தனர்.
இவர்களது மகன் சரவணன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். மூத்த மகள் கார்த் திகா கல்லூரி பேராசிரியராகவும், அவரது கணவர் லால்பகதூர் பிஎஸ் என்எல் நிறுவனத்திலும் வேலை பார்க்கின்றனர். இவர்கள் உமா மகேஸ்வரியின் வீட்டருகே வசிக் கின்றனர்.
இளைய மகள் பிரியா திருச்சி யில் கணவருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், இவர்களது வீட்டு பணிப்பெண் மேலப்பாளையம் தாய் நகரைச் சேர்ந்த மாரி (37) ஆகியோர் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
மாநகர போலீஸார் 3 தனிப்படை கள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடற்கூராய்வுக்குப் பிறகு, 3 பேர் உடல்களும் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
உமா மகேஸ்வரி, முருக சங்க ரன் ஆகியோர் கட்டையால் தாக்கப் பட்டுள்ளனர். இருவரது உடல்களி லும் சுமார் 20 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. மேலும், வீட்டில் 20 பவுன் நகைகள் காணா மல் போயுள்ளதாக போலீஸார் கூறு கின்றனர். நகைக்காக கொலை நடந்ததா, சொத்துப் பிரச்சினை கார ணமா என்பது இன்னும் தெளி வாகவில்லை. இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களை அடிப்படையாக வைத்து, வட மாநில கொள்ளையர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
உமா மகேஸ்வரியின் வீட்டை பூட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. அங்குள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை போலீஸார் ஆய்வு செய்கின்ற னர். மேலும், அருகில் உள்ள மாட்டுப் பண்ணைக்கு சென்றும் விசாரணை நடத்தினர். அக்கம்பக்கத்தில் கட்டிட வேலை பார்ப்போர், உறவினர்கள் என 70-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இதில், சந்தே கப்படும் நபர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனா லும், துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
ஸ்டாலின் அஞ்சலி
உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரின் உடல்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவர்களது மகள் களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் கூறியதாவது: திமுக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் உமா மகேஸ்வரிக்கு `பாவேந்தர் விருது’ வழங்கி முன் னாள் தலைவர் கருணாநிதி பாராட்டி யிருக்கிறார்.
இதுபோன்ற கொலைச் சம்பவங் கள் இந்த ஆட்சியில் நாள்தோறும் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. குற்ற வாளிகளை கண்டறிந்து உரிய தண்டனை தர வேண்டும் என்றார்.
உமா மகேஸ்வரி, முருக சங்கரன் உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வி.எம்.சத்திரம் மயா னத்தில் தகனம் செய்யப்பட்டன
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago