நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கும்பல் அட்டூழியம்; முன்னாள் மேயர், கணவர், பணிப்பெண் கொலை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமாமகேஸ்வரி (65), அவரது கணவர் முருக சங்கரன் (74), வீட்டுப் பணிப்பெண் மாரி (30) ஆகியோரை நேற்று பட்டப்பகலில் வீடுபுகுந்து ஒரு கும்பல் கொலை செய்தது.

பாளையங்கோட்டை மூளிக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. திருநெல்வேலி யில் அரசு பொறியியல் கல்லூரி அருகேயுள்ள புறநகர் பகுதியான ரோஸ்நகரில் உள்ள வீட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகில் மூத்த மகளும், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலுள்ள அறிஞர் அண்ணா கல்லூரி பேராசிரியரு மான கார்த்திகா தனது குடும்பத் தினருடன் வசிக்கிறார். உமா மகேஸ்வரியின் வீட்டில் பணிப் பெண்ணாக மேலப்பாளையம் தாய்நகரை சேர்ந்த மாரி (30) என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.

தாமதமாக தகவல்

தினமும் காலையில் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் தனது வீட்டுக்கு மாரி திரும்பி சென்றுவிடுவார். உமாமகேஸ்வரி யின் வீட்டில் காலையில் சமையல் வேலைகளில் ஈடுபட்ட மாரி, நேற்று மாலை வரையிலும் வீட்டுக்கு திரும்பவில்லை. இத னால், அவரது தாயார் வசந்தாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. செல்போனில் தொடர்புகொண்டும் தகவல் கிடைக்கவில்லை என்பதால், வசந்தா நேற்று மாலை 5.30 மணியளவில் உமாமகேஸ்வரியின் வீட்டுக்கு நேரில் சென்றார். வீட்டுக் கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, அருகிலுள்ள உமாமகேஸ்வரியின் மகளது வீட்டுக்குச் சென்று தெரிவித்ததும், அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்த மேலப்பாளை யம் போலீஸார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை மேற் கொண்டனர்.

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அங்குவந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாய் வீட்டினுள் மோப்பம் பிடித்துக்கொண்டு, அங்கிருந்து மேலப்பாளையம் தாய் நகர் செல்லும் சாலையில் சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்தது. கொலை நடைபெற்ற வீட்டில் பீரோ திறந்து கிடந்தது. உமாமகேஸ்வரி அணிந்திருந்த நகைகளும் மாயமாகியிருந்தன. கொலை குறித்து மேலப்பாளையம் போலீஸார் விசாரிக்கிறார்கள்.

முதல் பெண் மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி உதயமானதும் முதல் பெண் மேய ராக கடந்த 1996 முதல் 2001 வரை உமாமகேஸ்வரி பதவி வகித் திருந்தார். பின்னர், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித் தார். கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலில் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்துவந்தார். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே கட்சிப் பணியில் அதிகம் ஈடுபடாமல் ஆன்மிகத்தில் முழு ஈடுபாட்டுடன் இருந்தார்.

உமாமகேஸ்வரி சிறப்பாக வீணை வாசிப்பார். திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின்போது நடைபெறும் ஆன்மிக இசை நிகழ்ச்சிகளில் இவரது வீணை கச்சேரி தவறாமல் இடம்பெறும்.

உமாமகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உமாமகேஸ்வரிக்கு இரு மகள் களும், ஒரு மகனும் இருந்தனர். அவர்களில் ஒரு மகன் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மூத்த மகள் கார்த்திகா ஆரல்வாய்மொழியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். மற்றொரு மகள் பிரியா திருச்சியில் வசிக்கிறார்.

காரணம் என்ன?

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங் களில் விசாரித்து வருகிறார்கள். உமாமகேஸ்வரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கொலைக்கு இதுதான் காரணமா? என்பது குறித்து விசாரிக்கிறார்கள். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூளிக்குளம் பகுதியில் இவரது சகோதரர் குடும்பத்தினருக்கும், சிலருக்கும் முன்விரோதத்தில் இரு தரப்பிலும் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த முன்விரோதத்தில் கொலை நடைபெற்றுள்ளதா என்பது குறித் தும் விசாரணை நடைபெறுகிறது. நகைகள் திருட்டுபோயுள்ளதால், நகைக்காக கொலை நடைபெற் றுள்ளதா என்பது குறித்தும் பல் வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

3 தனிப்படைகள் அமைப்பு

முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வீட்டில், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ``வீட்டில் 10 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. நகைகளுக்காக இந்த கொலைகள் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கிறோம். வேறு காரணங்கள் உள்ளதா என்பது மேற்கொண்டு விசாரணையில் தெரியவரும். 4 அல்லது 5 பேர் வீட்டின் பின்புறமாக சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்திருக்கலாம் என்று தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்ற வாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்