சென்னை
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துக்குள் வைத்து மோதிக்கொண்டு, சக மாணவரை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூரில் இருந்து திருவேற்காட்டுக்கு செல்லும் 29-இ பேருந்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ் சாலையில் அரும்பாக்கம் சிக்னல் அருகே வந்தது. அப்போது பேருந்துக்குள் இருந்த பச்சையப் பன் கல்லூரி மாணவர்கள் தங்களுக் குள் பயங்கரமாக மோதிக் கொண்ட னர். சண்டைபோடும் நோக்கத் தோடு தயாராக வந்திருந்ததால் பட்டாக் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து வந்து சக மாணவர்களை சுற்றிவளைத்து வெட்டினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். இதையடுத்து ஓட்டுநர் உடனடி யாக வண்டியை நிறுத்தினார். இதையடுத்து தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு தரப்பு மாண வர்கள் பேருந்தில் இருந்து குதித்து வெளியே ஓடினர். அவர்களை பட்டாக் கத்தியுடன் துரத்திச் சென்று மற்றொரு தரப்பினர் தாக்கினர். சாலையில் சென்றவர்கள் இந்தக் காட்சிகளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேருந்துக் குள் 2 அடி நீள பட்டாக் கத்தி யுடன் வந்த ஒரு மாணவர் ஒருவர், அங்கிருந்த மேலும் சில மாண வர்களை வெட்டினார். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே ஓடினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் வசந்த் என்ற மாணவர் உட்பட 7 மாணவர்களுக்கு பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் 5 பேருக்கு சிறிய அளவில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்த அரும்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸார் வருவதை அறிந்து ஆயுதங்களுடன் வந்திருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்த மாணவர்களை போலீ ஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, ஆயுதங்களுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் களை கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மன்னிக்க முடியாத செயல்
இதுகுறித்து மக்கள் கூறியதா வது: ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி யில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதுபோன்ற மாணவர்களால் மற்ற மாணவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். மேலும் தவறான வழிக்குச் செல்ல வும் வாய்ப்பிருக்கிறது.
மேலும் கத்தியால் வெட்டுவது போன்ற அராஜகங்களால் பேருந்துக்குள் இருக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் ஆபத்து நேரலாம். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் பள்ளிகளுக்கும் அலுவலகத்துக்கும் செல்லும்போது இதுபோன்ற அத்து மீறல்களால் அவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ரவுடித் தனத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எனவே, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். இதன்மூலம் மீண்டும் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறாமல் காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
பொறுப்பை உணராத மாணவர்கள்
இச்சம்பவம் குறித்து பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, "பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு இருக்கும் குடும்ப பொறுப்பை உணராத மாணவர்கள் மட்டுமே அடிதடியில் ஈடுபடுகின்றனர். இவர்களால் மற்ற மாணவர்களின் படிப்பும் கெடும். பிரச்சினை செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்கக் கூடாது.
இந்த கல்லூரிகள் சுயாட்சி அதிகாரம் பெற்றவை. மாணவர்களின் முழு மதிப்பெண்களும் ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தச் சொல்லவில்லை. பிரச்னை செய்யும் மாணவர்கள் மீது இதை பயன் படுத்துவதில் தவறில்லை. பெற்றோர் கூட்டம் நடத்தி மாணவர்கள் செய்யும் தவறுகளை அவர்க ளுக்கு நேரடியாக தெரியப்படுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் முழு முயற்சியில் இறங்கி செயல்பட்டால் நிச்சயம் இந்த பிரச்னைகளை சரி செய்ய முடியும்" என்றார்.
சாகசமாக நினைக்கின்றனர்
முன்னாள் மாணவர் கார்த்திகே யன் கூறும்போது, "கல்லூரி மாணவர்கள் குரூப் சேர்ந்து கொண்டு சண்டை போடுவது சாகசமாகவே தெரியும். அவர்களின் வயது எத்தகைய ஆபத்தையும் சந்திக்கும் அளவுக்கு துணிச்சலை தரும். சாலையில் நின்று சண்டை போடுவதை மாணவர்கள் சாகசம் என்று நினைக்கின்றனர். ஆனால் அவர்களை அருவெறுப்பான பிராணிகளை போலத்தான் பொது மக்கள் பார்க்கின்றனர். இதை மாணவர்கள் உணர வேண்டும். சண்டையில் மாணவர்கள் காட்டும் துணிச்சலை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மற்ற கல்லூரி மாணவர்களுடன் படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் போட்டி போட்டு துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும். மாணவர் களின் பொறுப்பற்ற செயல்களால் பல நல்ல வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்" என்றார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பிரச்சினை செய்யும் மாணவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அந்த மாணவர் கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படும். இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், கல்லூரி பேராசிரி யர்கள், மாணவர்களின் பிரதிநிதி கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மோதலில் ஈடு படும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சலிங் மற்றும் ஆளுமை பயிற்சிகள் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
பொதுமக்கள் அதிர்ச்சி
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் இந்த ரவடித்தனத்தை அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேலிருந்து இளைஞர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அசல் ரவுடி களைப்போல நடந்துகொண்ட விதத்தை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago