பல திருமணங்கள் செய்த இளைஞர் புதுச்சேரியில் தற்கொலை: முதல் மனைவியிடம் சடலம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

பல பெண்களை திருமணம் செய்த இளைஞர் புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்டார். தருமபுரியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (32). இவர் தமிழகம், புதுச்சேரியில் கிளைகளை கொண்டுள்ள பியூட்டி பார்லரில் சிகை திருத்தும் பணி செய்து வந்தார். எந்த ஊர் கிளைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றதோ அங்கு சென்று சில மாதங்கள் பணியாற்றுவார். புது ஆட்களை தேர்வு செய்து பயிற்சியும் அளிப்பார். இச்சூழலில் புதுச்சேரி யில் இருந்த அவர் திடீரென்று நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த ரெட்டியார் பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது செல்போனை சார்ஜ் செய்த பிறகு பல்வேறு அழைப்புகள் வரத் தொடங்கின. அப்போதுதான் அவருக்கு பல மனைவிகள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர் பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “செல்போனில் வந்த அழைப் புகளின் பேரில் விசாரித்ததில், இறந்த சிங்காரவேலு ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் பெண் களை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை வழக்கமாக்கி யுள்ளார். முதல் மனைவி சத்யா ஓசூரிலும், இரண்டாவது மனைவி தனலட்சுமி தேனியிலும் உள்ளனர். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். மேலும், மதுரையில் காவ்யா என்பவருக்கு வீட்டிலேயே தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச் சேரிக்கு வந்த சிங்காரவேலு, ரெட்டியார்பாளையம் ஜவகர் நகர் குடியிருப்பில் தங்கினார். மேலும் மதுரை பெண்ணை புதுச்சேரிக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அப்பெண்ணோ தன்னை பதிவுத் திருமணம் செய்து கொண்டால்தான் வருவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மது அருந்திய அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்” என தெரிவித்தனர்.

சிங்காரவேலு இறந்த தகவலை போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது முதல் இரு மனைவிகள் 4 குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு வந்தனர். மூன்றாவதாக திருமணம் செய்த பெண்ணும் புதுச்சேரிக்கு வந்தார். மூவரும் தங்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு போலீஸாரிடம் வலியுறுத்தினர்.

தங்களுக்கு தொடர்ந்து மாதந் தோறும் பணம் அனுப்பியதாகவும், அவரது மற்ற திருமணங்கள் பற்றி தங்களுக்கு இதுவரை தெரியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி முதல் மனைவி சத்யாவிடம் சிங்காரவேலுவின் உடலை ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்