ஆவடி அருகே கணவன், மனைவி இருவரை கொலை செய்த ஆந்திர இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: ஆவடி அருகே சேக்காடு பகுதியில், கணவன், மனைவி இருவரை கொலை செய்த ஆந்திர இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள சேக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீசன்(67) - விலாசினி (58) தம்பதி. சென்னையில் உள்ள தமிழக அரசின் அச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இத்தம்பதி, சேக்காடு - பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), தன் மனைவி பூவலட்சுமி (22) மற்றும் 3 வயது மகன் ஆகியோருடன் கடந்த 2018-ம் ஆண்டில் ஜெகதீசனின் பண்ணை வீட்டின் அவுட் ஹவுஸில் தங்கி, பண்ணை வீட்டின் தோட்ட வேலைகளை செய்து வந்தார்.

இச்சூழலில், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி இரவு சுரேஷ்குமாரும், பூவலட்சுமியும், ஜெகதீசன் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, ஜெகதீசனையும், அவரது மனைவி விலாசினியையும் இரும்பு குழாயால் தாக்கி கொலை செய்துவிட்டு, வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த ஆவடி போலீஸார், உத்தரகண்ட் மாநிலம் - ஹரித்துவாரில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமார் மற்றும் பூவலட்சுமி ஆகிய இருவரை, பண்ணை வீட்டில் கொள்ளையடித்த நகைகளுடன் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-3-ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் போது, உடல்நலக்குறைவால் பூவலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதனால், அவருக்கு எதிரான வழக்கு நீக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில், சுரேஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து, பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-3-ன் நீதிபதி பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.15) தீர்ப்பு அளித்தார். அதில், ஜெகதீசன், விலாசினி ஆகிய இருவரை கொலை செய்த குற்றத்துக்காக, சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை கட்டத் தவறினால், 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்