ஆவடி: சென்னை, பாடியில் உள்ள பிரபல தனியார் பல்பொருள் விற்பனை அங்காடியில் ரூ.84 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கையாடல் செய்ததாக ஊழியர்கள் இருவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, பாடி சிடிஎச் சாலையில் பிரபல தனியார் பிரபல பல்பொருள் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது, இந்த விற்பனை அஙகாடியின் தங்க, வைர விற்பனை பிரிவில் உள்ள நகைகளின் இருப்பை சரி பார்க்கும் பணியில் சமீபத்தில், அப்பிரிவின் மேலாளர் இளையராஜா மேற்கொண்டார். அப்போது சுமார் ரூ. 84 லட்சம் மதிப்பிலான 54 ஜோடி தங்க கம்மல்கள் மற்றும் எட்டு வைர வளையல், தாலி சங்கிலிகள் மாயமானது தெரியவந்தது.
அதனை அங்காடியின் தங்க வைர விற்பனை பிரிவு ஊழியர்களான முத்துகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய இருவர் கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் கையாடல் செய்யப்பட்ட நகைகள் பாடி, கொரட்டூர், கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் விற்பனை அடகு வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, பல்பொருள் விற்பனை அங்காடி மேலாளர் சுரேஷ் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் நேற்று பல்பொருள் அங்காடி ஊழியர்களான முத்துகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
» சென்னை | பெண் தொழிலதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு: பணிப்பெண் சிறையில் அடைப்பு
» சென்னைக்கு போதை பொருள் கடத்தல்: நைஜீரியா, சூடான் நாடுகளை சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேர் கைது
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago