குன்றத்தூர்: குன்றத்தூர் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக காதலனே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோமா கோபா(19), தனது வீட்டின் அருகே வசித்து வந்த யாஸ்மதி போபாங்(17) என்ற சிறுமியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறுமி யாஸ்மதியை ஆசை வார்த்தை கூறி, சோமாகோபா ஜார்க்கண்டில் இருந்து அழைத்து வந்து, குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், குமரன் நகர் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்க வைத்து, கணவன்-மனைவி போல் வசித்து வந்துள்ளார். கூடவே தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களான சுனில் கோப் (19) மற்றும் பச்சா (19) ஆகியோரையும் தங்க வைத்துள்ளார். அனைவரும் திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர்.
கடந்த சில தினங்களாக சோமா கோபா நீண்ட நேரம் செல்போனில் ஒரு பெண்ணிடம் பேசி வந்ததால், சிறுமி இதனை கண்டித்துள்ளார். எனினும், சோமா கோபா அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி, கடந்த மாதம் 29- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற குன்றத்தூர் போலீஸார், இறந்த சிறுமி யாஸ்மதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியை ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி, அவரை தற்கொலைக்கு தூண்டிய சோமா கோபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
» பார்க்கிங் விவகாரத்தில் அடுத்தடுத்து வழக்கு பதிவு: ‘பிக் பாஸ்’ நடிகர் தர்ஷன் கைது
» சென்னை | அமெரிக்க பெண்ணுக்கு இ-மெயில் மூலம் பாலியல் தொல்லை: திருச்சி இளைஞர் கைது
இந்நிலையில், நேற்று சிறுமி யாஸ்மதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சிறுமி யாஸ்மதியின் கழுத்தை நெரித்ததால், கழுத்தெலும்பு உடைந்து அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் சோமா கோபாவின் நண்பனான அதே அறையில் தங்கியிருந்த சுனில் கோப் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து சுனில் கோப் போலீஸாரிடம் கூறியதாவது: ''நாங்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமியுடன் சேர்த்து நாங்கள் மொத்தம் ஆறு பேர் குமரன் நகரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து தினமும் வேலைக்குச் சென்று வந்தோம். சோமா கோபா சிறுமியை காதலித்து ஜார்கண்டிலிருந்து குன்றத்தூருக்கு அழைத்து வந்த நிலையில், ஆரம்பத்தில் சிறுமி யாஸ்மதியின் மீது சோமா கோபா பாசமாக இருந்தான்.
பின்னர் சோமாகோபாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அடிக்கடி அந்த புதிய பெண்ணிடன் செல்போனில் பேசி வந்தான். ஒரு கட்டத்தில் இது யாஸ்மதிக்கு தெரிய வந்தது. அதனால் அவள் அடிக்கடி சோமா கோபாவிடம் சண்டையிட்டு வந்தாள். இதனால், எரிச்சல் அடைந்த சோமாகோபா, யாஸ்மதியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று என்னிடமும், பச்சாவிடம் உதவி கேட்டான். அதற்கு நாங்கள் சம்மதித்தோம்.
அதன் பிறகு சம்பவம் நடந்த அன்று நான், சோமா கோபா மற்றும் பச்சான் மூன்று பேரும் சேர்ந்து, சிறுமி யாஸ்மதியின் கழுத்தை நெரித்து, துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்தோம். பின்னர், அவரது கழுத்தில் துப்பட்டாவை கட்டி, அங்கிருந்த மின்விசிறியில் தொங்க விட்டோம். பின்னர், எதுவும் தெரியாதது போல் நாங்கள் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்ப்பது போல் பார்த்து, அவரது உடலை கண்டு கண்ணீர் விட்டு, கதறி அழுவது போல் நடித்தோம். எங்களின் நடிப்பை போலீஸார் உட்பட அங்கிருந்த அனைவரும் நம்பி விட்டனர்.
யாஸ்மதி சிறுமி என்பதால் அவளுடன் குடும்பம் நடத்தியதாக சோமா கோபாவை மட்டும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் என்னையும், பச்சாவையும் போலீஸார் கண்டு கொள்ளவில்லை. இதனிடையே, யாஸ்மதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நாங்கள் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. நான் போலீஸாரிடம் சிக்கிக் கொள்வேன் என்று நினைக்கவில்லை. என்னுடன் இருந்த பச்சா கொலை நடந்த சில தினங்களிலேயே ஜார்கண்டிற்கு தப்பிச் சென்று விட்டான்" என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்ற மற்றொரு குற்றவாளியான பச்சாவை கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago