அரியலூர்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன், மாமனார், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று (ஏப்.3) தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் தனது மகள் வைஷ்ணவியை (27) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள உறவினர் நடராஜன் மகன் தினேஷ் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தினேஷ் சென்னையில் வேலை பார்த்துவந்த நிலையில், அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை வைஷ்ணவி கண்டித்துள்ளார். அதற்கு தினேஷ், அவரது தந்தை நடராஜன் (65), அம்மா ஜோதி (53) ஆகியோர், ‘விருப்பம் இருந்தால் வாழு இல்லை என்றால் இறந்து விடு’ என வைஷ்ணவியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வைஷ்ணவி கடந்த 2022-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சச்சிதானந்தம் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த உடையார்பாளையம் போலீஸார் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.செல்வம், தற்கொலைக்கு தூண்டிய தினேஷ், நடராஜன், ஜோதி ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜராகினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago