தமிழகத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய இருவர் கைது

By செய்திப்பிரிவு

டிஜிட்டல் கைது மோசடி மூலம், தமிழகத்தில் கோடிக் கணக்கில் பணம் சுருட்டிய இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பல் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட மேலும் பல மாநிலங்களில் இதே பாணியில் பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், மும்பை போலீஸ் பேசுவதாக கூறி டிஜிட்டல் கைது மூலம் அண்மையில் ரூ.88 லட்சம் பறிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா என்பவரை கைது செய்தனர். பறிக்கப்பட்ட பணம் அனுப்பப்பட்ட 178 வங்கி கணக்குகளை கண்டறிந்து, பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடந்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு சென்ற போலீஸார் அங்கு பதுங்கி இருந்த பிரதீம் போராவின் கூட்டாளிகள் 4 பேரை கைது செய்தனர். இந்த 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் இக்கும்பல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், மும்பை, கோவா ஆகிய இடங்களில் முகவர்களை வைத்து அவர்கள் மூலம் பொதுமக்களின் தகவல்களை திரட்டி, ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பறித்தது தெரியவந்தது.

அமலாக்கத்துறை விசாரணை: இந்த வழக்கில் சட்ட விரோத பண பறிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையில் இறங்கியது. வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் மேற்குவங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சுமார் 30 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 2-ம் தேதி சோதனை மேற்கொண்டது. அப்போது, ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதை ஆய்வு செய்ததில் டிஜிட்டல் கைது மூலம் கிடைக்கும் பணத்தை மோசடி கும்பல், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் தனியார் நிறுவனங்களின் கணக்குக்கு கொண்டு சென்று இருப்பதும், பின்னர் தங்களது வங்கி கணக்கில் பணத்தை பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு செல்போன் எண்கள் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கொண்டு சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக ஒருவரை கொல்கத்தாவிலும், மற்றொருவரை டெல்லியிலும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர்களது முழு பின்னணி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்