தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் ஒரே நாளில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள் - மக்கள் அச்சம்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மறைமலை நகர் முதல் தாம்பரம் வரை ஒரே நாளில் 10 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவத்தால் 30-க்கும் அதிகமான சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் சிலர் காயமும் அடைந்தனர்.

சிட்லபாக்கம் திருமுருகன் நகர், பாம்பன் சுவாமிகள் சாலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (56) என்பவர் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற வரும் கடல் கன்னி நிகழ்ச்சி பார்த்துவிட்டு நேற்று 9.30 மணிக்கு குடும்பத்துடன் நடந்து வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஈஸ்வரின் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி சரடு அறுத்துள்ளனர். உடனடியாக ஈஸ்வரி சுதாரித்து கொண்டு நகைகளைக் கையில் பிடித்ததும் பாதி நகை 5 சவரன் நகையை அறுத்து சென்றனர். இதுகுறித்து சேலையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

பீர்க்கன்காரனை, தேவநாதன் நகர், அன்னை தெரசா 2-வது தெருவை சேர்ந்த முனீஸ்வரி (33). தனது வீட்டு வாசலில் குழந்தைக்கு சோறு ஊட்டி கொண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நகர்கள் வீட்டு வாசலில் நின்று இருந்த முனீஸ்வரியின் கழுத்தில் இருந்து தாலி செயினை பறித்த போது, சுமார் அரை சவரன் மாங்கல்யம் மட்டும் மர்ம பறித்துச் சென்றனர். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மறைமலை நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(50). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 6:30 மணி அளவில் இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வட மாநில இளைஞர் 2 பேர் மாஸ்க் அணிந்து வந்து முதலில் 2 சிகரெட் வாங்குவது போல் நடித்து, ராஜேஸ்வரி திரும்பிய போது அவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இந்தக் கொள்ளை குறித்து மறைமலை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஊரப்பாக்கம், ரயில் நிலையம் சாமி நகரில் துர்கா (45) என்பவர் சிறிய மாளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு நேற்று இரவு 9.20 மணியளவில் வந்த இருவர், துர்கா கழுத்தில் இருந்து 3 சவரன் நகை பறித்து தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

மேற்கு தாம்பரம், தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (58). பெண் உதவி ஆய்வாளர். சென்னை மாநகர காவல் ஆணையரக உதவி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு, 9.45 மணிக்கு, பணி முடிந்து பேருந்தில் தாம்பரம் வந்த இந்திரா, அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இந்திராவின் ஐந்தரை சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து தாம்பரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

படப்பை அருகே ஆதனுாரைச் சேர்ந்தவர் சுமதி (60). அவரது கணவர் லாரன்ஸ். ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப்., அதிகாரி. நேற்று மாலை, மண்ணிவாக்கம் - ஆதனுார் சாலை வழியாக கணவன் – மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுமதியின் 7 சவரன் செயினை பறித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட சுமதி செயினை விடாமல் பிடித்துகொண்டார். மர்ம நபர்கள் 5 சவரன் மதிப்புள்ள பாதி செயினை பறித்துக் கொண்டு மாயமாகினர். மணிமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதேபோன்று கூடுவாஞ்சேரி - நெல்லிகுப்பம் சாலை, ஓட்டேரி, பீர்க்கன்கரணை, மணிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்களிடம் இவர்கள் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காந்தி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி உள்ளனர். அவர்களை போலீஸார் பிடிக்க முயன்றும் முயற்சி தோல்வியடைந்தது. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து திருடர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 10 இடங்களில் சுமார் 30 சவரன் கொள்ளை அடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் நடந்த சம்பவம் புகார் வரவில்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர். வழிபறி சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில் மறைமலை நகர், அண்ணா சாலையில் தனியார் நிதி நிறுவன வாசலில் நின்றிருந்த செங்கல்பட்டை அடுத்த மெய்யூரை சேர்ந்த ஜீவரத்தினம்(26), என்பவருக்கு சொந்தமான ‘பல்சர்’ இருசக்கர வாகனத்தை திருடி வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்துள்ளது.

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், தாம்பரம் ஆணையர் அபின் தினேஷ் மோதக் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீஸாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதனால் போலீஸார் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் நடந்த செல்போன், ஏராளமான திருட்டு சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்