சென்னை | எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.72 லட்சம் மோசடி செய்தவர் ஆந்திரா​வில் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஐடி ஊழியர் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.71.63 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை போலீஸார் ஆந்திரா சென்று கைது செய்துள்ளனர்.

சென்னையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் (ஐ.டி) ஒன்றில் பணி செய்து வரும் கொளத்தூரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், சென்னையில் ‘சீயோன்’ என்ற பெயரில் ஆன்லைன் சேவை நடத்தி வந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் கிராந்தி நகரைச் சேர்ந்த வடலபள்ளி விஜயகுமார் (39) என்பவரது அறிமுகம் கிடைத்தது.

அவர், எனது மகளுக்கு தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பி பல்வேறு தவணைகளில் அவருக்கு ரூ.71 லட்சத்து 63 ஆயிரம் கொடுத்தேன்.

ஆனால், அவர் உறுதி அளித்தபடி மருத்துவ கல்லூரியில் சீட் பெற்றுத் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. எனவே, வடலபள்ளி விஜயகுமாரிடமிருந்து எனது பணத்தை மீட்டுத் தந்து, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி ஆணையர் சிவா, காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த வடலபள்ளி விஜயகுமாரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், வடலபள்ளி விஜயகுமார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி பல பேரை ஏமாற்றியதும், அவர் மீது நெல்லூர் வேதபாளையம் காவல் நிலையத்திலும், தர்காமிட்டா காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், இதேபோல் பலரிடம் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்