சென்னை​யில் ரூ.50 கோடி போதைப்​பொருள் பறிமுதல் விவகாரம்: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்​பலுக்கு தொடர்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை​யில் கைது செய்​யப்​பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்​பலுக்கு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்​பலுடன் தொடர்பு இருப்​பதாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. அரும்​பாக்கம் காவல் நிலைய தனிப்​படை​யினர், சென்னை​யில் போதைப் பொருள் கடத்​தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த நபர்​களை, கடந்த அக்டோபர் மாதம் முதல் அடுத்​தடுத்து கைது செய்து வருகின்​றனர்.

இந்த கும்​பலைச் சேர்ந்த ராஜா, அவரது கூட்​டாளி சத்திய சீலன் ஆகியோர் இரு தினங்​களுக்கு முன்பு கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மிருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள மெத்​தம்​பெட்​டமைன், 5 துப்​பாக்​கி​கள், 79 தோட்​டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்​யப்​பட்​டது.

இந்த கும்​பலுக்கு தலைவனாக செயல்​பட்ட தென்​னாப்​பிரிக்கா நாட்​டைச் சேர்ந்த ஜான் ஒக்காபரை போலீ​ஸார் புது டில்​லி​யில் கடந்த 3-ம் தேதிகைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், ‘மியான்மர் நாட்​டில் இருந்து மெத்​தம்​பெட்​டமைன், கெட்​டமைன் போன்ற போதைப் பொருட்கள் டெல்​லிக்கு கடத்​தப்​பட்டு அங்கிருந்து அவை தமிழகம் கொண்டு வரப்​பட்டு, தமிழகத்​தில் இருந்து கடல் வழியாக இலங்​கைக்கு கடத்​தப்​படுவது தெரிய​வந்​தது.

இக்கும்​பல், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்​பலைச் சேர்ந்தகஞ்சிப்​பாணி இம்ரான் உத்தரவுப்படி செயல்​பட்​டிருப்​பதும், இலங்​கை​யைச் சேர்ந்த கஞ்சிப்​பாணி இம்ரான் இரு ஆண்டு​களாக தலைமறைவாக இருப்​பதும், போதைப் பொருள் கடத்​தலில் ஈடுபடு​வதும், பாகிஸ்​தான், ஆப்கானிஸ்​தான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடு​களில் இருந்து ஐரோப்பிய நாடு​களுக்கு போதைப் பொருளை கடத்து​வதும் தெரிய​வந்​தது.

கஞ்சிப்​பாணி இம்ரான் கேட்​டதன் பேரிலேயே நாட்டுத் துப்​பாக்​கி​களை​யும் அந்த கும்பல் கடத்​தி​யிருப்பது தெரிய​வவந்​துள்ளது. கஞ்சிப்​பாணி இம்ரான் நெருங்கிய தொடர்​பில் இருந்த இந்த கும்​பலைச் சேர்ந்​தவர்களை போலீ​ஸார் தங்களது காவலில் எடுத்து விசா​ரிக்க திட்​ட​மிட்​டுள்​ளனர். அதேநேரத்தில், கஞ்சிப்​பாணி இம்ரான் இந்தியா​வில் தலைமறைவாக இருக்​கிறாரா என்றும் க்யூ பிரிவு போலீ​ஸார் தீவிர விசா​ரணை​யில் ஈடுபட்​டுள்​ளனர்.

மேலும் ஒரு காவலர் கைது: போதைப் பொருள் கடத்தல் வழக்​கில் சென்னை அசோக் நகர் காவல் நிலை​யத்​தில் பணிபுரிந்த காவலர் ஜேம்ஸ், அயனாவரம் காவல் நிலைய காவலர் பரணி மற்றும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரி​வில் (என்​சிபி) பணியாற்றும் காவலர்கள் ஆனந்த், சபீர் கைது செய்​யப்​பட்​டனர். இதன் தொடர்ச்சியாக வண்ணாரப்​பேட்டை ​காவல் நிலை​யத்​தைச் சேர்ந்த அருள்பாண்​டியன் (30) என்​பவரை கைது செய்து ​போலீ​ஸார் ​விசா​ரிக்​கின்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்