சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட போலீஸார் கோட்டூர்புரம் லேக் வியூ பகுதியில் உள்ள ஞானசேகரனின் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டு லேப்டாப், ஹார்டு டிஸ்க், பெண் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஏற்கெனவே, பாதிப்புக்கு உள்ளான மாணவி மற்றும் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், பணியாளர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞானசேகரனிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.
ஞானசேகரன் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போது அவரது ஒரு கால், கையில் முறிவு ஏற்பட்டதாக கூறி அவரை போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, போலீஸ் பாதுகாப்புடன் அங்கேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவரிடம் பாலியல் வன்கொடுமை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.
மேலும் ஞானசேகரன், ‘சார்’ ஒருவருடன் தனிமையில் இருக்க வேண்டும் எனக்கூறி மாணவியை மிரட்டி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த ‘சார்’ யார் என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டர் சட்டத்தில் சிறை: இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரையை ஏற்று மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞானசேகரன் இதோடு 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago