தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்​பூரில் உள்ள காவல்​துறை தலைமை காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது.

எதிர்முனை​யில் பேசிய நபர், ‘சென்னை​யில் உள்ள தலைமைச் செயல​கம், டிஜிபி அலுவலகம் ஆகிய​வற்றுக்கு வெடிகுண்டு வைத்​துள்ளேன். அது சற்றுநேரத்​தில் வெடித்​துச் சிதறும். முடிந்​தால் தடுத்​துப்​ பாருங்​கள்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, 2 இடங்களுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி​களுடன் சென்​றனர். தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகம் முழு​வதும் சோதனை மற்றும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. சந்தேகப்​படும்​படியான பொருட்கள் எதுவும் கிடைக்க​வில்லை.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பது தெரியவந்தது. மேலும், மது போதையில் அவர் மிரட்டல் விடுத்தார் என்பதையறிந்த போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலை​யில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்​கப்​பட்​ட​தால், தலைமைச் செயல​கத்​தில் கூடு​தல் ​போலீஸ் பாது​காப்பு ​போடப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்