தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு தீ வைத்த இளைஞரிடம் போலீஸ் விசாரணை

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.4) காலையில் கோயிலுக்கு வந்த இளைஞர், 10 லிட்டர் கேனில் பெட்ரோல் கொண்டுவந்துள்ளார். கோயில் கோபுரவாசல் முன்பு திடீரென கேனை திறந்து, அதில் இருந்த பெட்ரோலை தரையில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, தீ வைத்த இளைஞர் கோயிலுக்குள் செல்ல முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தென்காசி போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த பாலன் (31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “ஆனந்தபாலன் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீப காலமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். நான்தான் சிவன் என்றும், நான்தான் கோயிலில் உள்ளேன் என்றும் கூறுகிறார். யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தீ வைத்ததாக தெரியவில்லை. பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

தீ வைக்கப்பட்ட இடத்தில் தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடமுழுக்கு விழாவுக்காக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடந்த இந்த தீ வைப்பு சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்