கோவை: கோவை அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில், காஸ் டேங்கர் லாரி, நேற்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கவிழ்ந்த டேங்கரில் இருந்து எரிவாயு வெளியேறிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சம்பவ இடத்துக்கு அருகாமையில் இருந்த 37 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 மெட்ரிக் டன் எல்.பி.ஜி. சமையல் எரிவாயுவை ஏற்றிய டேங்கர் லாரி, கோவை பீளமேட்டிலுள்ள காஸ் குடோன் நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டு வந்தது. லாரியை தென்காசியை சேர்ந்த ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் (30) ஓட்டினார்.
கோவை அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தை கடந்து உப்பிலிபாளையம் வழித்தடத்தில் திரும்பியபோது, டேங்கர் லாரியின் ஆக்சில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், லாரியில் இருந்து டேங்கர் தனியாக பிரிந்து கவிழ்ந்தது. லாரியும் மறுபுற சுவரில் மோதிய நிலையில் டேங்கர் பின்னோக்கி அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதனால், டேங்கரின் ‘பிரஷர் மீட்டர்’ உடைந்து, அதன் வழியாக எரிவாயு வெளியேற தொடங்கியது.
» இரவில் வெயில் தரும் வெள்ளி நிலா... - கியாரா அத்வானி க்ளிக்ஸ்!
» விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ ட்ரெய்லர் எப்படி? - காதலும் ஆக்ஷனும்!
தகவலறிந்த மாநகர காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், எரிவாயு நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெளியேறிக் கொண்டிருந்த காஸ் மூலம் தீப்பிடித்து விடக்கூடாது என்பதற்காக டேங்கர் மீது தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். மேம்பாலத்தை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குட்பட்ட இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள 37 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேம்பாலத்துக்கு வரும் அனைத்து வழித்தடங்களும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன. திருச்சியிலுள்ள எரிவாயு நிறுவன மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் சத்யநாராயணன், சங்கர், பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், எண்ணெய் நிறுவனங்களின் தொழில்நுட்ப ஒப்பந்ததாரர் ராபர்ட் ஆகியோர் டேங்கரில் ஏற்பட்ட கசிவை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு, வேதியியல் கலவை, சிலிகான் பேஸ்ட் உள்ளிட்டவற்றை ஒட்டி தற்காலிகமாக கசிவை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து முதல்கட்டமாக ரோப்பை கட்டி டேங்கரை தூக்கி நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடிக்க தயார் நிலையில் நிறுத்தப் பட்டனர். தொடர்ந்து கிரேன்களை பயன்படுத்தி கீழே விழுந்த டேங்கர், 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 11 மணியளவில் தூக்கி நிறுத்தப்பட்டது.
மாற்று லாரி அங்கு வரவழைக்கப்பட்டு, அதனுடன் டேங்கர் இணைக்கப்பட்டு 11 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், விபத்து நடந்த இடத்தில் இருந்து டேங்கர் லாரி புறப்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்கள், போலீஸ் ஜீப் பாதுகாப்புடன் லாரி பீளமேட்டில் உள்ள குடோனுக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக, ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago