இளம் பெண்ணிடம் பண மோசடி: சென்னையில் முன்னாள் காதலன் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: திருமணம் செய்வதாகக் கூறி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இளம் பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த காதலனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இளம் பெண்ணும், பள்ளியில் அவருடன் ஒன்றாக படித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (28) என்ற இளைஞரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் ரூ.2 லட்சம் வரை அஜித்குமார் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர், அப்பெண்ணை திருமணம் செய்யாமல், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இருவரும் காதலிக்கும்போது, அஜித்குமாருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

இது குறித்து, அப்பெண் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அஜித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்