சென்னை: மதுரவாயல், புதிய சுப்ரமணியம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிபிரசாத் (30). பாரிமுனையில் உள்ள மூலிகை (ஹெர்பல்) பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல், இவர் கடந்த 14-ம் தேதி மாலை, கடைகளில் வசூல் செய்த பணத்துடன் இருசக்கர வாகனத்தில் பாரிமுனை, வெங்கடாச்சல முதலி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 கொள்ளையர்கள் ஹரிபிரசாத்தை மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துத் தப்பினர். இதுதொடர்பான வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஹரிபிரசாத் அளித்த புகாரின்பேரில் பூக்கடை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த இதயகண்ணன் (21), மணலி சின்ன சேக்காட்டைச் சேர்ந்த மகேஷ் (22), மணலி ஜாகிர் உசேன் 2-வது தெருவைச் சேர்ந்த நரேஷ் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்துடன் இருந்த பணப்பை, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன்கள் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைதான நரேஷ், மகேஷ் ஆகியோர் மீது ஏற்கெனவே தலா ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago