சென்னை: சென்னை கே.கே.நகரில் 2-வது தளத்தில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (30). 2017-ம் ஆண்டு பேட்ஜ் 2-ம் நிலை காவலரான இவர், செம்பியம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். செல்வகுமாரும், கே.கே.நகர் மின் வாரியத்தில் உதவி பொறியாளராக பணிப்புரிந்து வரும் அவரது சகோதரர் பெருமாள் ராஜ் (38) என்பவரும், கே.கே.நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வகுமார் மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பெருமாள் ராஜூக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெருமாள் ராஜை தனி அறையில் தள்ளி செல்வகுமார் பூட்டியுள்ளார்.
இதுகுறித்து, பெருமாள் ராஜ், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் இடத்துக்கு போலீஸார் வந்ததை கண்டு, செல்வகுமார் மற்றொரு அறைக்குள் சென்று, கதவை உள்ளே பூட்டிக் கொண்டார். பின்னர், 2-வது தளத்தில் உள்ள அவரது வீட்டின் பின் பக்க கதவை திறந்து, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி கீழே இறங்க செல்வகுமார் முயற்சித்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில், மதில் சுவரில் இருந்த கம்பி, அவரது உடலில் குத்தி, ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
» நகை கொள்ளை வழக்கில் திருப்பம்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு
இதையடுத்து போலீஸார், அவரை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago