சென்னை | ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் தனியார் பள்ளி அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவதில் ஆட்டோ ஓட்டுநர்களான ரமேஷ், பாண்டுரங்கன், சதீஷ், பிரகாஷ், சுரேஷ், ரவி ஆகியோருக்கும், அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் சிவா என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இருதரப்பையும் போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதியன்று சிவா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ரமேஷ், பாண்டுரங்கன், பிரகாஷ், சுரேஷ் ஆகியோர் சிவாவை பட்டப்பகலில் ரோட்டுக்கு இழுத்து வந்து வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களான ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்களான பாண்டுரங்கன், பிரகாஷ், சுரேஷ், அவர்களது தாயார் மாரியம்மாள், சகோதரரின் மனைவி சித்ரா, நண்பர்கள் தனசேகர், டில்லிபாபு, ரவி, சதீஷ், சிவா என 11 பேரை அசோக் நகர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது சிவா இறந்துவிட்டார். அதேபோல தனசேகர் என்பவர் தொடர்ந்து தலைமறைவானதால் இருவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு, எஞ்சிய 9 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2018 ஏப்ரலில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கொலையுண்ட சிவாவின் தாயார் ராணியும், அசோக் நகர் போலீஸாரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், மனுதாரர் ராணி தரப்பில் வழக்கறிஞர் ஆர்.முருகபாரதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த கொலை வழக்கில் குற்றச்சாட்டை போலீஸார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். அதை கீழமை நீதிமன்றம் சரியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ரமேஷ், பாண்டுரங்கன், சதீஷ், பிரகாஷ், சுரேஷ், ரவி, டில்லிபாபு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே இவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதேநேரம் மாரியம்மாள், சித்ரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்த உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம், என தீர்ப்பளித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்