​போதைப் பொருள் வழக்​கில் சர்வதேச கடத்தல் கும்​பலுடன் தொடர்பா? - கைது செய்​யப்​பட்ட 2 போலீ​ஸாரிடம் தனிப்படை விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைதான இரு போலீஸாருக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போதைப் பொருள் ஒழிப்பு பணியில் சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பொருள் விற்ற வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யின் மகன் அருண் கடந்த அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் அமைந்தகரை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பரணி போதைப் பொருள் விற்ற வழக்கில் நீலாங்கரை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கொளத்தூரை சேர்ந்த சுரேந்திரநாத் என்பவர் போதைப்பொருளுடன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அசோக்நகர் போலீஸ்காரர் ஜேம்சை வடபழனி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் ஆனந்த் என்பவரிடம் இருந்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்தை தி.நகர் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ஆனந்தின் நண்பரான மற்றொரு போலீஸ்காரர் சமீர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீஸார் முடிவு செய்து அனுமதி கோரியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இருவரையும் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் போலீஸ்காரர்கள் ஆனந்த், சமீர் ஆகிய இருவரையும் வடபழனி போலீஸ் நிலையம் அழைத்து வந்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரும் கடத்தல்காரர்களிடம் இருந்து பிடிபட்ட போதை பொருட்களை விற்பனை செய்தார்களா? அல்லது சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்களா? உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் 2 வழக்கு: போதைப் பொருள் வழக்கில் கைதான காவலர் ஆனந்த் மீது டாக்டர் உட்பட இருவரை மிரட்டி நகை, பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடிப்படையாக வைத்து காவலர் ஆனந்த் மீது கே.கே.நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்