சென்னை: பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை சென்னையில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். வலது காலில் குண்டு பாய்ந்ததை தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, ரவுடிகள் பலர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்து வருகின்றனர். ஆனாலும், அவர்களை போலீஸார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஹரி என்ற அறிவழகன் (24). இவர் மீது வியாசர்பாடி, சோழவரம், திருத்தணி, மீஞ்சூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் உட்பட பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் ‘ஏ’ கேட்டகரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில், சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், அறிவழகன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
எனவே, இவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புளியந்தோப்பு துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் அவரை தேடி வந்தனர். அப்போது, இவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் ஒரு பிரிவினர் அங்கு விரைந்தனர். தன்னைத் தேடி போலீஸார் வந்திருப்பதை அறிந்த அறிவழகன் அங்கிருந்து தப்பி சென்னை வந்தார். இதையறிந்த போலீஸார், சென்னையில் ரகசியமாக கண்காணித்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
» சென்னை மாநகராட்சியில் ரூ.279 கோடி புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார்
இந்நிலையில், நேற்று காலை ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி 2-வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த அறிவழகனை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது அவர், தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், தங்களது தற்காப்புக்காக துப்பாக்கியை காட்டி அறிவழகனை சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர், மீண்டும் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். அப்போது, உதவி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் துப்பாக்கியால் சுட்டதில் அறிவழகனின் வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, துப்பாக்கி மற்றும் 6 கிலோ கஞ்சா, பட்டாக்கத்தியை பறிமுதல் செய்த போலீஸார், அறிவழகனை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், ரவுடியை சுட்டுப்பிடித்த உதவி காவல் ஆய்வாளர் பிரேம்குமாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர். 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையை பிரபல ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago