சென்னை: அண்ணனை நூதன முறையில் சிக்க வைத்து நீதிமன்றத்தையும், போலீஸாரையும் ஏமாற்றி தலைமறைவாக இருந்த தம்பி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோடம்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் பழனி அவரது சகோதரியுடன் சேர்ந்து தன்னையும், தன் மகனையும் தினமும் அடித்து துன்புறுத்துவதாக கூறி இருந்தார். அதன்பேரில் கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பழனி, அவரது சகோதரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது பழனி போலீஸில் தனது அண்ணன் பன்னீர்செல்வத்தின் அடையாள அட்டையை கொடுத்து அவர் பெயரிலேயே நூதன முறையில் மோசடி செய்து சிறைக்கு சென்றார். இவ்வழக்கில் பழனியின் சகோதரியை விடுவித்த மகிளா நீதிமன்றம் பழனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார் பழனி. அப்போது அவரது தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பழனி தலைமறைவானார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பழனிக்கு நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
» ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் இன்று தொடக்கம்: டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தங்கி எலக்ட்ரீஷியன் கான்ட்ராக்டராக வேலை செய்து வரும் பன்னீர்செல்வத்தை பழனி என நினைத்து போலீஸார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் நிரபராதி என்று கூறிய பன்னீர்செல்வம், தன்னுடைய தம்பி பழனி தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தப்பிவிட்டதாக கூறினார். இதைக் கேட்ட நீதிபதி மற்றும் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பழனியின் மனைவியை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதுதான், பழனி தனது சகோதரர் பன்னீர்செல்வம் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டு தப்பிய பழனி மீது தனியாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோடம்பாக்கம் போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கீழ்க்கட்டளையில் செல்வம் என்ற பெயரில் பதுங்கியிருந்த பழனியை 3 மாத தேடுதல் வேட்டைக்கு பின் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளில் காவலாளியாக வேலை செய்து கொண்டு, அடிக்கடி தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்.
பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே சிம் கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்கு ஆரம்பித்து சில மாதங்களிலேயே விட்டுவிடுவது என இருந்துள்ளார். இந்த நிலையில் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 2-ம் மனைவியின் செல்போனிலிருந்து, தனது அக்காவுக்கு போன் செய்துள்ளார்.
அந்த எண்ணின் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்த போலீஸார், அதன் அடிப்படையில் கீழ்க்கட்டளையில் பதுங்கி இருந்த பழனியை கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை என்பதால் அவரை போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago