ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் மாணவர் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 5வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிலோமினா (75). மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 30-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிலோமினா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதைக் கேட்டு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையில் இருந்த பொருட்களை தாக்கி உடைத்தனர். இதில் மருத்துவமனையில் இருந்த கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், நிலைமையை கட்டுக்கு கொண்டுவர முயன்றனர். அப்போது, ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமாரும் (53) பலமாக தாக்கப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த அவர், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, எஸ்.எம்.நகரை சேர்ந்த அந்தோணிராஜ் (42), திலீப்குமார் (19), நுங்கம்பாக்கம் பிரின்ஸ் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். திலீப்குமார், சென்னையில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்