திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாய், தந்தை, மகனை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல், 8 பவுன் நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்தனர். திருமணமான மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை தெய்வசிகாமணியின் தோட்டத்துக்கு வீட்டுக்கு சவரத் தொழிலாளி வலுப்பூரன் வந்தபோது, வீட்டுக்கு வெளியே தெய்வசிகாமணியும், உள்ளே அலமாத்தாள் மற்றும் அவரது மகன் செந்தில்குமார்(46) ஆகியோரும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து வந்த அவிநாசிபாளையம் போலீஸார், மூவரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ஒரு விஷேசத்துக்காக வந்த செந்தில்குமார், தோட்டத்து வீட்டில் தாய், தந்தையுடன் வீட்டுக்குள் உறங்கியுள்ளார். நாய் குரைக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த தெய்வசிகாமணியை மர்ம நபர்கள் இரும்பு ராடால் அடித்தும், வெட்டியும் கொன்றுள்ளனர். பின்னர், வீட்டுக்குள் சென்று தாய் மற்றும் மகனையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்த 8 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பணம், நகைக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றோம்" என்றனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், சேலம் சரக டிஐஜி உமா மற்றும் உயரதிகாரிகள் அங்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமியிடம், கொல்லப்பட்ட செந்தில்குமாரின் மனைவி கவிதா கதறி அழுதபடி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்: திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போய்விட்டது. தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக திமுக அரசு மாற்றியிருக்கிறது. இந்தக் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதுடன், சட்டம்-ஒழுங்கை் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பதால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காவல் துறையை சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதித்து, மக்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் மூவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன், கொலையாளிகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago