இந்திய - இலங்கை கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையால் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 9 பேர் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இந்திய கடற்படையினருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான புலனாய்வு தகவல் பரிமாற்றத்தின் விளைவாக, நடுக்கடலில் இரண்டு படகுகளில் 500 கிலோ மெத்தாபேடாமைன் போதைப் பொருளை கைப்பற்றி, 9 கடத்தல்காரர்களும் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு சந்தேகப்படும்படியாக இந்திய பெருங்கடல் கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளது, அந்தப் படகை தடுத்து நிறுத்தி சோதனையிடுமாறு இலங்கை கடற்படை சார்பாக கொழும்பு கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அளித்தது.

இலங்கை கடற்படை வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், உடனே இந்திய பெருங்கடலில் ரோந்துப் பணியிலிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான சாரதா ரோந்து கப்பல், ஐஎன்ஸ் ஹெலிகாப்டர், ஆளில்லா விமானம் மூலம் உடனே கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

நவம்பர் 24, 25 ஆகிய இரண்டு நாட்களில் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இரண்டு இலங்கையைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. படகுகளிலிருந்து 500 கிலோ மெத்தாபேடாமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கையைச் சேர்ந்த 9 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 9 கடத்தல்காரர்கள் 500 கிலோ போதைப்பொருளை வெள்ளிக்கிழமை இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பலிலிருந்த அந்நாட்டு கடற்படையினரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிராந்திய கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே உருவாக்கப்பட்ட பிணைப்புகளை மீண்டும் இந்த கூட்டு நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

9 days ago

மேலும்