பல்லடம் அருகே தாய், தந்தை, மகன் கொலை - போலீசார் தீவிர விசாரணை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வ சிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று( நவ.29) நடைபெறும் நிச்சயதார்த்த விழாவுக்காக, மகன் செந்தில்குமார் வியாழக்கிழமை செம்மலைகவுண்டம்பாளையத்துக்கு வந்துள்ளார். நேற்றிரவு தாய், தந்தையுடன் வீட்டுக்குள் இருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை கத்தியால் குத்தி, இரும்புராடால் அடித்து கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர்.

நிச்சயதார்த்த விழாவுக்கு செல்வதற்காக தெய்வசிகாமணி அந்த ஊரைச் சேர்ந்த சவரத் தொழிலாளி சக்கரகட்டி என்பவரை அதிகாலை நேரத்துக்கு வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தார். இன்று அதிகாலை சவரத் தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அவிநாசிபாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தார்‌. சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான அவிநாசிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதில் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்