பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: மும்பையில் 34 வயது பெண் கைது

By செய்திப்பிரிவு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிட்டல் விடுத்தது தொடர்பாக 34 வயது பெண் ஒருவரிடம் மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மும்பையில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு பிரதமர் மோடியை கொலை செய்வதற்கான திட்டமும் ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மும்பை மேற்கு புறநகர் அம்போலியில் இருந்து இந்த மிரட்டல் வந்ததை அறிந்த போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பிறகு இந்த வழக்கில் 34 வயது பெண் ஒருவரை பிடித்து போலீஸ் காவலில் வைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் அவர் மீது இதற்கு முன் குற்ற வழக்கு எதுவும் இல்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்