சென்னை: அரும்பாக்கம் வாசுகி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(80). திருமணம் ஆகாத இவர், அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக சுப்பிரமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி(50) என்பவர் சுப்பிரமணியைக் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முகப்பேரில் வசிக்கும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்கு பின்னர், பக்கத்து வீட்டு பெண்ணான ராணி சுடுதண்ணீர் போடுவதற்காக சுப்பிரமணி வீட்டுக்குச் சென்றபோது 2 தெரு நாய்கள் வீட்டுக்குள் புகுந்து சுப்பிரமணியை கடித்து குதறியதை கண்ட அவர், நாய்களை விரட்டி விட்டுள்ளார். பின்னர், அவரைப் பார்த்தபோது உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அதிர்ச்சியில் ராணி கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். உடனடியாக இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நிலையில் கிடந்த சுப்பிரமணியை தெரு நாய்கள் கடித்ததா? அல்லது நாய்கள் கடித்ததால் சுப்பிரமணி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
» சையது மோடி பாட்மிண்டன் தொடர்: பி.வி.சிந்து, லக்சயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
» சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட்: 28 பந்துகளில் சதம் விளாசி உர்வில் படேல் சாதனை
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 mins ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago