ஆவடி | இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதையில் பயணிகளை தாக்கிய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலை​யத்​தில் மதுபோதை​யில் ரயில் பயணிகள் மீது தாக்​குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை நேற்று ஆவடி ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்ற​வூர் அருகே உள்ள பாக்கம் பகுதி​யைச் சேர்ந்​தவர் பரமசிவம்​(54). பட்டாபிராம்​-கோபாலபுரம் துணை மின் நிலை​யத்​தில் லைன் இன்ஸ்​பெக்​டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்​தினம் பணி முடிந்து, வீட்டுக்கு செல்​வதற்காக இந்து கல்லூரி ரயில் நிலையம் வந்துள்ளார்.

தட்டிக் கேட்டதால் அடி: அப்போது, முதல் நடைமேடை​யில் மதுபோதை​யில் சுற்றித் திரிந்த 4 பேர் பிளாஸ்​டிக் பைப்​பால், அரக்​கோணம் ரயில் மார்க்​கத்​தில் செல்​லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலரை தாக்​கியதாக கூறப்​படு​கிறது. இதை தட்டிக் கேட்ட பரம சிவத்தை, போதை இளைஞர்கள் பிளாஸ்​டிக் பைப்​பால் சரமாரியாக தாக்​கினர். இதில் பரமசிவத்​தின் தலை மற்றும் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்​தது.

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து, பரமசிவத்தை மீட்டு ஆவடி அரசு மருத்​துவ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இச்சம்​பவம் தொடர்பாக வழக்​குப் பதிவு செய்த ஆவடி ரயில்வே போலீ​ஸார், பரமசிவம் உள்ளிட்ட ரயில் பயணிகளை தாக்​கியது தொடர்பாக பட்டாபிராம்- சித்தேரிக்​கரை, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுபாஷ்(20), இப்ராஹிம்​(23), 14 வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர். இச்​சம்​பவம் தொடர்பாக மேலும் ஓர் இளைஞரை ​போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

54 mins ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

மேலும்