சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கொல்லம் விரைவு ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையமாக பழவந்தாங்கல் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் வந்தார். இவர் 4-வது நடைமேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது.
இந்த ரயில் பழவந்தாங்கல் நிலையத்தை அடைந்தபோது, நடைமேடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, அந்த பெண் தொடர்பாக விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே போலீஸார், “உயிரிழந்த இளம்பெணுக்கு 23 வயது முதல் 25 வயது இருக்கும். இப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம். வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. காதல் தோல்வி அல்லது வேறு ஏதாவது குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். அனைத்து காவல் நிலையங்களுக்கும் இளம்பெண் காணவில்லை என்பது தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், தகவல் கொடுக்குமாறு தெரிவித்துள்ளோம்.” என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago