ராமநாதபுரம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கருடாமுத்தூர் வி.வடமலைபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (45). இவர், தனது உறவினர் தீபக் அரவிந்த் (26), நாகராஜன் (36), கார்த்திகேயன் (33) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் ராமேசுவரம் வந்துள்ளார். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் நேற்று காரில் புறப்பட்டனர். மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் அருகே இடையர்வலசு பகுதியில் சென்றபோது, திடீரென சாலையோரமுள்ள சிறிய பாலத்தில் கார் மோதியது. இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த தீபக் அரவிந்த், நாகராஜன், கார்த்திகேயன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் அரவிந்த், நாகராஜன் ஆகியோர் உயிரிழந்தனர். கார்த்திகேயன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தில் உயிரிழந்த நாகராஜன் இந்து முன்னணி நிர்வாகி எனவும், காயமடைந்த கார்த்திகேயன் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியத்தின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago