ஓசூரில் வழக்கறிஞரை கொல்ல முயன்ற வழக்கு: உடந்தையாக இருந்த குமாஸ்தா மனைவியும் கைது

By செய்திப்பிரிவு

ஓசூர்: நீதி​மன்ற நுழைவாயி​லில் வழக்​கறிஞரை அரிவாளால் வெட்​டிக் கொல்ல முயன்ற வழக்கில், குமாஸ்​தா​வின் மனைவி​யும் கைது செய்​யப்​பட்​டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதி​மன்ற நுழைவாயி​லில் நேற்று முன்​தினம் வழக்​கறிஞர் கண்ணன் என்பவரை மற்றொரு வழக்​கறிஞரிடம் குமாஸ்​தாவாகப் பணிபுரி​யும் ஆனந்​தகு​மார் என்பவர் அரிவாளால் வெட்​டி​னார். இதில், பலத்த காயமடைந்த கண்ணன், தனியார் மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, ஓசூர் ஜுடீசியல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் (எண்.2) ஆஜரான ஆனந்​த குமாரை போலீஸார் கைது செய்து, விசாரணை மேற்கொண்​டனர். இதனடிப்படை​யில், கண்ணனைக் கொலை செய்யத் தூண்​டியதாக ஆனந்​தகு​மாரின் மனைவி வழக்​கறிஞர் சத்யா​வ​தியை (35) நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீ​ஸார் கூறிய​தாவது: அரிவாளால் வெட்​டப்​பட்ட கண்ணனும், ஆனந்​தகு​மாரின் மனைவி சத்யா​வ​தி​யும் மூத்த வழக்​கறிஞர்​களிடம் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்​குமிடையே தவறான நட்பு இருந்​துள்ளது. இதை ஆனந்​தகு​மார் கண்டித்​த​தால், சத்யாவதி நட்பைக் கைவிட்​டார். ஆனால், சத்யா​வ​தி​யின் செல்​போனுக்கு ஆபாச எஸ்எம்​எஸ்​-களை கண்ணன் அனுப்பி வந்தார். இதனால், கடந்த 5 மாதங்​களுக்கு முன்னர் கண்ணன் மீது ஓசூர் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆனந்​தகு​மார் புகார் அளித்​தார். இவர்களை சக வழக்​கறிஞர்கள் சமாதானம் செய்​தனர்.

அதன் பின்னரும் கண்ணன், சத்யா​வ​தி​யின் செல்​போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்​தகு​மார், கண்ணனை வெட்டி உள்ளார். இதற்கு சத்யா​வ​தி​யும் உடந்​தையாக இருந்தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து அவர் கைது செய்​யப்​பட்​டார். இவ்​வாறு ​போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்