ரஷ்ய அரசு பெயரில் ரூ.2,000 கோடி முதலீடு பெற்று தருவதாக சென்னை தொழில​திபரிடம் ரூ.7.32 கோடி மோசடி: 9 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2000 கோடி முதலீடு பெற்றுத் தருவதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.7.32 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்​கில் வட்டாட்​சியர் உட்பட 9 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​தில் அண்மை​யில் புகார் ஒன்று அளித்​தார். அதில், “சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் இந்தோ - ரஷ்யன் அசோசி​யேட் என்ற பெயரில் நிறு​வனத்தை நடத்தி வருபவர் அருண்​ராஜ்(38). இவர் ஈஞ்சம்​பாக்​கத்​தில் உள்ள ஆலிவ் பீச்​சில் வசிக்​கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்​டமைப்​பின் பிரதி​நிதி என்று கூறி என்னிடம் அறிமுக​மானார்.

மேலும், ரஷ்ய அரசு இந்திய திட்​டங்​களுக்காக கோடிக்​கணக்​கில் பணம் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. திருச்​சி​யில் நான் நடத்தி வரும் வியாபார திட்​டத்​துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றுத் தருவ​தாக​வும் ஆசை வார்த்தை கூறினார். இதற்கு அவர் கமிஷனாக என்னிட​மிருந்து ரூ.7 கோடியே 32 லட்சத்து 45,000 பெற்றுக் கொண்​டார்.

மேலும், எனது நிறு​வனத்​தில் ரஷ்ய நிறு​வனம் முதலீடு செய்​துள்ளதாக போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்​பித்​தார். அவை போலி என்பது பின்னர்​தான் தெரிய ஆரம்​பித்​தது. அருண்​ராஜை​யும், அவரது கூட்​டாளி​களை​யும் தொடர்பு கொண்​ட​போது தொடர்பு கொள்ள முடிய​வில்லை. எனவே, என்னிடம் மோசடி செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என புகாரில் தெரி​வித்து இருந்​தார்.

இதுகுறித்து மத்திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசாரணை நடத்த உத்தர​விடப்​பட்​டது. அதன்​படி, அப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்​பார்​வை​யில் உதவி ஆணையர் சிவா, காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா அடங்கிய தனிப்படை போலீ​ஸார் விசாரணை மேற்​கொண்​டனர். இதில், புகாரில் குறிப்​பிட்​டிருந்த அனைத்​தும் உண்மை என தெரிய​வந்​தது.

இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்​பட்டு தலைமறைவாக இருந்த அருண்​ராஜ், அவரது கூட்​டாளிகள் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்​கோட்டை குமாரன் (43), சோழவரம் நாகேந்​திரன் (39) ஆகியோரை கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 476 பவுன் தங்கம், 400 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், ரூ.14.50 லட்சம் ரொக்​கம், 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்​யப்​பட்டன.

முன்னதாக அருண்​ராஜ் கூட்​டாளி​களான மதன் குமார், ஓய்வு பெற்ற ​விஏஓ தர்​மன், ரூபா, விக்​னேஷ்வரன், டாஸ்​மாக் பிரிவு வட்​டாட்​சி​யர் ​விஸ்​வநாதன், சசிகு​மார் ஆகிய மேலும் 6 பேர் கை​தாகினர். தொடர்ந்து ​விசா​ரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்