மனச்சோர்வால் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட ஜிப்மர் மருத்துவ மாணவர் உயிரிழப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஜிப்மரில் மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர் மனச்சோர்வால் தன்னைத் தானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார்.

புதுவை ஆனந்தாநகர் வரதன் வீதியைs சேர்ந்தவர் கோபால். தொழிலதிபர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். அதில் ஒரு மகன் ரவீந்திரன் (வயது 25) ஜிப்மர் மருத்துவமனையில் எம்டி படித்தார். ரவீந்திரன் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.

இதற்காக அவர் இரவும் பகலும் படித்து வந்துள்ளார். இதில் அதிகபடியான மனச்சோர்வுக்கு ஆளாகிய ரவீந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மார்பில் தனக்கு தானே கடந்த செப்டம்பர் 21-ல் குத்தியுளார். இதில் கத்தி அவரது இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டுத்தியது. குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ரவீந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோரிமேடு உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்