சென்னை: அண்ணனின் காதலியை கொலை செய்து விட்டு, அப்பாவிபோல் சென்னை ஓட்டலில் வேலை செய்த மேற்கு வங்க இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்து அம்மாநில போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் தார்ஜி (27). சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக சமையலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அப்போது, திருமணமாகி தனியாக வசித்து வரும் அண்ணன், அவரை சந்தித்துள்ளார்.
தான் ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாகவும், தற்போது தொடர்பை விட்டு விட்ட நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 7ம் தேதி சிலிகுரி நகரம், பாக்தி நகர் காவல் நிலைய உட்பட்ட பகுதிக்கு அந்த பெண்ணை வரவழைத்து, அபிஷேக்கும் அவரது அண்ணனும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அபிஷேக், சென்னை திரும்பி வழக்கம் போல நட்சத்திர ஓட்டலில் பணி செய்துள்ளார். இந்நிலையில் பாக்திநகர் போலீஸார் , அபிஷேக்கின் அண்ணனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் பதுங்கி இருந்த தம்பியான அபிஷேக்கை பிடிக்க நேற்று இரவு மேற்குவங்க போலீஸார் சென்னை வந்தனர்.
» தேங்கும் குப்பைகள்; சகதிக்காடாக மாறும் கோயம்பேடு சந்தை: வியாபாரிகள் சாலை மறியல்
» ‘வாழு... வாழ விடு’ - தனுஷ் பேசும் வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
பின்னர், அவர்கள் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்தை சந்தித்தனர். அவரது உத்தரவின் பேரில் பட்டினம்பாக்கம் போலீஸார் மேற்குவங்க போலீசாருக்கு உதவியாக சென்று நட்சத்திர ஓட்டலில் வழக்கம்போல் பணியிலிருந்த அபிஷேக்கை கைது செய்தனர். பின்னர் அவர் மேற்கு வங்க போலீஸாரால் அவர்களது மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago