குன்றத்தூர்: எலி மருந்து தெளிக்கப்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு

By கோ.கார்த்திக்

தாம்பரம்: குன்றத்தூர் அருகே வீட்டில் எலி மருந்து தெளிக்கப்பட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தடயவியல் துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தனர்.

குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவருக்கு திருமணம் ஆகி பவித்ரா (30) என்ற மனைவியும், வைஷாலினி(6) என்ற மகளும், சாய்சுந்தரேசன் என்ற ஒரு வயதே ஆன மகனும் இருந்தனர். இந்நிலையில், கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். குழந்தையும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், எலித் தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான பெஸ்ட் கண்ட்ரோல் என்ற நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து, கடந்த 13ம் தேதி தனியார் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் வந்து அவரது வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்தனர்.

மேலும், வீடு முழுவதும் எலிகள் வராமல் இருப்பதற்காக மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென நள்ளிரவு நேரத்தில் மருந்தில் இருந்து பரவிய நெடி தாங்காமல் குழந்தை வைஷாலினிக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், மற்றொரு குழந்தையான சாய்சுந்தேரேசனும் உயிரிழந்தார்.

மேலும், கிரிதரண் மற்றும் மனைவி பவித்ரா அக்கம் பக்கத்தினர் மூலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு இரண்டு குழந்தைகள் பலியானதற்கு காரணமான தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தினகரன், சங்கரதாஸ் என்று மொத்தம் மூன்று பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், பணியாளர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி தனது குழுவினருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், தடயவியல் துறை அதிகாரிகள் அனைவரும் முறையாக மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் அணிந்த பிறகே அந்த வீட்டிற்குள் சென்றனர். அப்போது, வீட்டில் அளவுக்கு அதிகமாக எலி மருந்து அடித்ததன் காரணமாக அதிக நெடி பரவி குழந்தைகள் இறந்ததை அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததாக தெரிகிறது.

எனினும், போலீஸாரின் விசாரணை மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வறிக்கைக்கு பிறகே, எலி மருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரசாயன வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவரும் என போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இரண்டு குழந்தைகள் இறந்து போனது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெற்றோருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால், இறந்து போன 2 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவித்து, பிரேத பரிசோதனை செய்வதற்கான அனுமதி தொடர்பான கையெழுத்து பெற்ற பிறகு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. அதுவரையில் பிரேத பரிசோதனை நடைபெறாது என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

மேலும்