சென்னை: ‘தாய் பாசத்தால் எனது மகன் தவறு செய்துவிட்டான்’ என்று விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரி மாதம் முதல் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர் பாலாஜி எனது ஸ்கேன் அறிக்கையை சரிவர பார்த்து, எனக்கு சிகிச்சை அளித்திருந்தால், எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மருத்துவர் பாலாஜிக்கும் எங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை.
என் தாயின் நுரையீரல் பாதிப்பு குறித்து ஏன் சொல்லவில்லை என்பதே என் மகனின் ஆதங்கம். அவர் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. தாய்ப் பாசத் தில் செய்து விட்டான். என் மகனும் இதய நோயாளி, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். எனக்கு புற்றுநோய் இரண்டாவது நிலையில் இருந்தபோது சிகிச்சைக்கு சென்றேன். ஆனால் எனக்கு 5-வது நிலைபுற்றுநோய் இருந்ததாக வதந்திபரப்பப்படுகிறது. வீட்டை காவல் துறையினர் சோதனையிட்டு, என்மருத்துவ ஆவணம், என் மகனின் சில ஆவணங்கள் உள்ளிட்ட வற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
5-வது மாதத்தில் என்னுடைய நுரையீரல் பாதிப்பில்லாமல் இருந்ததற்கான ஸ்கேன் அறிக்கையும், 6-வது மாதத்தில் பாதிக்கப்பட்ட நுரையீரலின் ஸ்கேன் அறிக்கையும் இருக்கிறது. நகலெடுத்துவிட்டு தருவதாக சொன்னார்கள். ஆனால் தரவில்லை. இனி அரசு மருத்துவ மனைக்கு வருவோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். என் மகனுக்கு எதுவும் ஆகக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago