ஆந்திராவில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து சூட்கேஸில் எடுத்து வந்த தந்தை, மகள்: சென்னையில் சிக்கியது எப்படி?

By செய்திப்பிரிவு

பொன்னேரி: ஆந்திராவில் 6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, உடலை சூட்கேஸில் ரயிலில் எடுத்து வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு தப்ப முயன்றதாக தந்தை, மகளை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (44). பொற்கொல்லரான இவர் தனது 17 வயது மகளுடன் நேற்று முன்தினம் பிற்பகலில் சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் பயணித்தார். அந்த ரயில், நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றபோது, தந்தையும், மகளும் 2 சூட்கேஸ்களுடன் இறங்கினர்.

பின்னர், அவர்கள் 2 சூட்கேஸில் ஒன்றை ரயில் நிலைய நடைமேடையில் வைத்துவிட்டு நடந்து சென்றனர். இதுகுறித்து, பயணிகள் சிலர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். உடனே, தந்தை, மகளை பிடித்த, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீஸார், நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் மூதாட்டி ஒருவரின் சடலம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், மூதாட்டியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகளை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கொலையான மன்னம் ரமணி.

முதல்கட்ட விசாரணையின் போது பாலசுப்பிரமணியம், ``கல்லூரியில் படித்துவரும் என் மகளை, என் வீட்டருகே வசித்து வந்த மன்னம் ரமணி (65), பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றார். இதையறிந்த நான் கோபத்தில் மன்னம் ரமணியை தாக்கியபோது, அவர் இறந்துவிட்டார். இதையடுத்து உடலை எங்காவது கொண்டு போய் போட்டுவிடலாம் என நினைத்து, உடலை சூட்கேஸில் அடைத்து எடுத்துக்கொண்டு சூளூர்பேட்டையில் ரயிலில் மகளுடன் ஏறினேன். ரயில் மீஞ்சூர் வந்தபோது, அங்கு இறங்கி சூட்கேஸை வைத்துவிட்டு தப்பியோட முயன்றோம்'' என்றார்.

தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தெரியவந்ததாவது: சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலசுப்பிரமணியம் நெல்லூர் பகுதியில் நடத்தி வரும் நகைப் பட்டறைக்கு மன்னம் ரமணி அடிக்கடி சென்று வந்துள்ளார். ரமணி அணிந்திருந்த 6 பவுன் நகைக்காக அவரை கொலை செய்ய பாலசுப்பிரமணியம் திட்டமிட்டுள்ளார். இதற்காக, ரமணியை தன் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை வரவழைத்த பாலசுப்பிரமணியம், அவரை தாக்கி கொலை செய்து விட்டு, நகையை பறித்துள்ளார். தொடர்ந்து, ரமணியின் உடலை தமிழகப் பகுதியில் வீச திட்டமிட்டு, சூட்கேஸில் உடலை அடைத்து எடுத்துக் கொண்டு, மகளுடன் ரயிலில் தமிழகத்துக்கு வந்துள்ளார். இவ்வாறு ரயில்வே போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னம் ரமணியை காணவில்லை என அவரது உறவினர்கள் ஆந்திர மாநில காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். ஆகவே, ஆந்திர போலீஸாரும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகளிடம் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

மேலும்