கோவை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் பழனிசாமி (39). இவரது மனைவி வத்சலா (35). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டம் வேடபட்டி பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி பழனிசாமி - வத்சலா தம்பதியர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று (நவ.4) இவர்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர், பழனிசாமி, அறையின் கதவை தட்டினர். ஆனால், யாரும் திறக்கவில்லை. இதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அறைக்கதவை மாற்றுச் சாவியை பயன்படுத்தி திறந்து உள்ளே சென்றனர். அங்கு பார்த்த போது பழனிசாமி - வத்சலா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர்.
உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர், அவர்கள் இருவரையும் பரிசோதித்த போது, இருவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து தகவல் அறிந்த காட்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், பழனிசாமி - வத்சலா தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருந்தார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர்களது மகன் கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததால் பழனிசாமி - வத்சலா தம்பதியர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். மகனது இழப்பைத் தாங்க முடியாததால், லாட்ஜில் அறை எடுத்து தங்கி தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago