திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று (நவ.5) அதிகாலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் போலீஸார், சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஆர்.கே.பி.எஸ் பப்ளிக் பள்ளி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு பள்ளி, அதன் அருகே உள்ள ராஜாஜி வித்யாலயா ஆகிய 4 சிபிஎஸ்இ பள்ளிகள், மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றுக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் திருச்சி மாநகர போலீஸ் சார் அந்தந்த பள்ளி, கல்லூரியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அந்தந்த பள்ளிகள், கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பகுதியில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் கடந்த மாதம் இதே போல் இமெயில் மற்றும் கடிதம் மூலம் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவதால் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிய முடியாமல் திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் திணறி வருகின்றனர்.
» ‘நியோ - மேக்ஸ்’ மோசடி: பாதிக்கப்பட்டோர் நவ.15 வரை புகார் தரலாம் - மதுரை பொருளாதார குற்றப்பிரிவு
இதனால் சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு அந்த இமெயில் முகவரிகளை ஏற்கெனவே அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை அதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இது தமிழக சைபர் க்ரைம் போலீஸாருக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகவே உள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago