மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இன்று (நவ.4) காலை நடந்த சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு பெண் காவலர்கள் உயிரிழந்தனர்.
மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார் மீது மோதியதில் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
சென்னையை, அடுத்த மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயஸ்ரீ (38) மற்றும் காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா (33). மேற்கண்ட இருவரும், வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் மகளிர் போலீஸார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோதியது. இதில். பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.
» சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
» நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணம் பறித்து தப்பிய 8 வயது சிறுவன்
தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காயமடைந்த காவலர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், எஸ்ஜ.,யின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் நித்யாவும் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
19 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago